Jailer trailer: மாஸாக என்ட்ரி கொடுக்கும் முத்துவேல் பாண்டியன்..வெளியான ஜெயிலர் ட்ரைலர் அப்டேட்..!

​எதிர்பார்ப்பில் ஜெயிலர்நாளுக்கு நாள் ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. நெல்சனின் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகவுள்ளது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் ஜெயிலர் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. அதற்கு ஏற்றாற்போல படக்குழுவும் படத்திற்கு ப்ரோமோஷன் செய்து வருகின்றனர். இந்நிலையில் மிகப்பெரிய … Read more

வளரும் நடிகரை விமர்சித்த 'பாகுபலி' தயாரிப்பாளர்

ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா நடித்து பெரும் சாதனை படைத்த படம் 'பாகுபலி'. அப்படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டா பதிவிட்ட டுவீட் ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. “வெற்றியை கவனத்துடன் கையாள வேண்டும். சமீபத்தில் வளரும் நடிகர் ஒருவரிடம் அறிமுக இயக்குனர் ஒரு கதையைச் சொல்லச் சென்ற போது அந்த நடிகர் குறைந்தபட்ச மரியாதையைக் கூடத் தரவில்லை. அவரது வாழ்க்கையை வளர்க்க இந்த குணம் உதவாது என்பதை அவர் விரைவில் புரிந்து கொள்வார் என்று … Read more

Cook With Comali- குக் வித் கோமாளி பரிசுத் தொகை மைம் கோபி என்ன செய்யப்போறார் தெரியுமா? ரசிகர்கள் நெகிழ்ச்சி

சென்னை:Cook With Comali (குக் வித் கோமாளி) குக் வித் கோமாளி சீசன் 4ல் வென்ற பரிசு தொகையை மைம் கோபி எதற்காக செலவழிக்கப்போகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. விஜய் ரியாலிட்டி ஷோக்களில் பிரபலமானது குக் வித் கோமாளி. சமையல், நகைச்சுவை, பொழுதுபோக்கு என அனைத்தையும் கலந்து நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கென்று உலகம் முழுவதும் தமிழர்கள்

டெல்லி அவசர சட்ட மசோதா – மக்களவையில் இன்று தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு

புதுடெல்லி, டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. இந்த அவசர சட்டத்துக்கு எதிராக டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு மாநில முதல் மந்திரிகளையும், அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். பாராளுமன்றத்தில் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டால் அதை … Read more

மேஜர் லீக் கிரிக்கெட்: நிக்கோலஸ் பூரனின் அதிரடி சதம்- எம்.ஐ. நியூயார்க் அணி 'சாம்பியன்'

டல்லாஸ், 6 அணிகள் இடையிலான முதலாவது மேஜர் லீக் கிரிக்கெட் (எம்.எல்.சி.) 20 ஓவர் போட்டி அமெரிக்காவில் கடந்த 2 வாரங்களாக நடந்து வந்தது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை அரங்கேறிய இறுதிப்போட்டியில் வெய்ன் பார்னெல் தலைமையிலான சீட்டில் ஆர்கஸ் அணி, நிகோலஸ் பூரன் தலைமையிலான எம்.ஐ.நியூயார்க் அணியை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த நியூயார்க் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த சீட்டில் ஆர்கஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு … Read more

சாகசம் செய்ய நினைத்து 68-வது மாடியிலிருந்து கீழேவிழுந்து இன்ஸ்டா பிரபலம் பலி..!

ஹாங்காங், பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ரெமி லூசிடி, 30 வயதான இவர் தீவிர சாகச விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டவர். இவர் உயரமான கட்டிடங்களில் சுவர் வழியாக ஏறி சாகசம் செய்வதை வாடிக்கையாக கொண்டவர். மேலும் அதனை புகைப்படங்கள் எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டு வந்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கடந்த வாரம், இவர் ஹாங்காங்கிற்கு டிரெகன்டர் டவர் எனும் மிக உயரமான கட்டிடத்தில் ஏறி படம் எடுக்க சென்றார். இதற்காக லிப்டில் ஏறி 68-வது மாடிக்கு … Read more

கையகப்படுத்திய நிலத்தில் சாகுபடிக்கு அனுமதித்தது ஏன்? – என்எல்சி நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: ‘கையகப்படுத்திய நிலத்தில் சாகுபடி செய்ய ஏன் அனுமதித்தீர்கள்?’ என என்எல்சி நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி நிர்வாகம் இரண்டு சுரங்க விரிவாக்க பணிக்காக கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் நிலங்களை 2007-ம் ஆண்டு கையகப்படுத்தியது. இந்தநிலையில் சம்பந்தப்பட்ட இடங்களில் வாய்க்கால் வெட்டும் பணியின்போது பயிர்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் அறுவடை செய்யப்படும் வரை விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது … Read more

மணிப்பூர் மக்களிடம் எதிர்க்கட்சி எம்பிக்கள் கேட்டறிந்ததை நாங்கள் அறிய விரும்புகிறோம்: நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: எதிர்க்கட்சி எம்பிக்கள் மணிப்பூர் சென்று அங்கு மக்கள் கூறியதை கேட்டு வந்துள்ள நிலையில், அது குறித்து அவர்கள் கூற, நாங்கள் கேட்க விரும்புகிறோம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டு வரும் நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மணிப்பூர் இன வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டது. ஆனால், எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்த அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சி எம்பிக்கள் மணிப்பூருக்குச் சென்று, அங்குள்ள … Read more

Jailer: ஜெயிலர் யாரையும் ஏமாற்றாது..ஏனென்றால்..அடித்து கூறும் வசந்த் ரவி..!

ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாக இன்னும் பத்து நாட்கள் இருக்கும் நிலையில் படத்திற்கு எதிர்பார்த்ததை விட ஹைப் இருந்து வருகின்றது. இப்படம் துவங்கிய போது இருந்த எதிர்பார்ப்பை விட தற்போது பலமடங்கு எதிர்பார்ப்பு உயர்ந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் இப்படத்தின் ப்ரோமோஷன்ஸ் தான். பொதுவாக நெல்சனின் படங்களின் ப்ரோமோஷன்கள் முற்றிலும் வித்யாசமாக இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதே போல ஜெயிலர் படத்திற்கும் தன் வழக்கமான ஸ்டைலில் ப்ரோமோஷனை துவங்கி வைத்தார் நெல்சன். காவாலா பாடல் … Read more