திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பக்தர்கள் படுகாயம்

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட்டுகள் அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், ரெயில் நிலையம் அருகே உள்ள ஸ்ரீனிவாசம் மற்றும் கோதண்ட ராமர் கோவில் சத்திரம் ஆகிய 3 இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் டிக்கெட்டுகள் வினியோகம் செய்யப்பட்டது.

வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கூடுதலாக 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டது. கடந்த வாரம் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர்.

இதனால் கடந்த சனி, ஞாயிறு, இன்று, நாளை ஆகிய 4 நாட்களுக்கான இலவச தரிசனங்கள் டிக்கெட்டுகள் வினியோகிக்கப்பட்டு விட்டது. இதனால் கடந்த சனிக்கிழமை டிக்கெட் கவுண்டர் மூடப்பட்டது.

தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்கள் 3 நாட்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

3 நாட்களுக்கு பிறகு இலவச தரிசன கவுண்டர் இன்று திறக்கப்பட்டு டோக்கன் விநியோகிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் பக்தர்கள் டிக்கெட் வாங்க குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 3 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.

போலீசார் கூட்டத்தை கலைத்தனர். கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் இன்று ஒருநாள் மட்டும் டோக்கன் இல்லாமல் இலவச தரிசனத்தில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.