பாதுகாப்பு தேவைக்காக இந்தியா, ரஷியாவை நம்பியிருப்பதை விரும்பவில்லை- அமெரிக்கா கருத்து

வாஷிங்டன்:
இந்தியா வான்வெளி பாதுகாப்பை அதிகரிப்பதற்காக ரஷியாவுடன் கடந்த 2018ம் ஆண்டு 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஏவுகணை அமைப்பு ஒப்பந்தம் மேற்கொண்டது. 
உக்ரைன் உடனான ரஷிய போர் விவகாரத்தில் நடுநிலை வகித்து வரும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து போர் நிறுத்தம் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி,
இந்தியாவுடனான அமெரிக்க நட்புறவு தெளிவாக உள்ளது. என்றார்.  
பாதுகாப்பு தேவைகளுக்காக ரஷியாவை இந்தியா நம்பியிருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை என்றும்,  பிற நாடுகளின் விஷயத்திலும் அமெரிக்காவின் நிலைப்பாடு இதுதான் என்றும், அவர் கூறினார். 
அதே நேரத்தில், இந்தியாவுடன் அமெரிக்கா வைத்திருக்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பை நாங்கள் மதிக்கிறோம், அது முக்கியமானது என்பதால் அதில் முன்னோக்கி செல்வதற்கான வழிகளை நாங்கள் பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு பாதுகாப்பு விவகாரத்தில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற மிகவும் ஆர்வமாக உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை ஆலோசகர் டெரெக் தெரிவித்திருத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.