பானிபூரி விற்பனைக்கு தடை.. மாநகராட்சி அதிரடி உத்தரவு..!

காலரா அதிகரித்து வருவதாலும், பானிபூரியில் பயன்படுத்தப்படும் பானியில் காலரா பாக்டீரியா இருப்பதாலும், காத்மண்டு பள்ளத்தாக்கு பகுதியில் பானிபூரி விற்பனைக்கு தடை விதித்து லலித்பூர் மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நேபாள தலைநகர் காத்மண்டுவில் கடந்த சில நாட்களாக காலராவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பானிபூரியில் பயன்படுத்தப்படும் பானியில் காலரா பாக்டீரியா இருப்பதாகக் கூறி, பானிபூரி விற்பனை மற்றும் விநியோகத்தை நிறுத்த லலித்பூர் மாநகராட்சி முடிவு செய்தது.

மாநகரக் காவல்துறை தலைவர் சீதாராம் ஹச்சேதுவின் கூற்றுப்படி, பள்ளத்தாக்கில் காலரா பரவும் அபாயம் இருப்பதாகக் கூறி, கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளிலும், நடைபாதை பகுதிகளிலும் பானிபூரி விற்பனையை நிறுத்துவதற்கு மாநகரம் உள் ஏற்பாடுகளை செய்துள்ளது.

காத்மாண்டு பள்ளத்தாக்கில் மேலும் ஏழு பேருக்கு காலரா உறுதி செய்யப்பட்ட  நிலையில், பள்ளத்தாக்கில் மொத்த காலரா நோயாளிகளின் எண்ணிக்கை 12 ஐ எட்டியுள்ளது என்று சுகாதார மற்றும் மக்கள் தொகை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் தொற்றுநோயியல் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பிரிவின் இயக்குனர் சுமன்லால் டாஷ் கருத்துப்படி, காத்மாண்டு பெருநகரில் ஐந்து காலரா வழக்குகளும், சந்திரகிரி நகராட்சி மற்றும் புதனில்கந்தா நகராட்சியில் தலா ஒருவருக்கு காலரா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தற்போது டெக்குவில் உள்ள சுக்ரராஜ் ட்ராப்பிக்கல் மற்றும் தொற்று நோய்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில், காலரா அறிகுறிகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்கு செல்லுமாறு நேபாள சுகாதார மற்றும் மக்கள் தொகை அமைச்சகம் மக்களை வலியுறுத்தியுள்ளது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.