8 ஆண்டுகளாக முழுமை பெறாமல் இருந்த திருச்சி அரிஸ்டோ இரயில்வே மேம்பாலம் இன்று திறப்பு..!!

திருச்சி ரயில்வே சந்திப்பில் அகலம் குறைந்த ரயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக புதிய மேம்பாலம் அமைக்கும் பணி இரண்டு கட்டங்களாக கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. 2014 ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக அரிஸ்டோ ரவுண்டானாவை மையமாக வைத்து திண்டுக்கல் சாலை, மத்திய பேருந்து நிலையம், ரயில்வே சந்திப்பு ஆகியவற்றை இணைக்கும் வகையில் பாலம் கட்டும் பணி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்கனவே கொண்டுவரப்பட்டது. ஆனால் சென்னை – மதுரை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையிலான மன்னார்புரம் பகுதியில் ராணுவத்துக்கு சொந்தமான இடத்தில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக இந்த பகுதியில் அணுகு சாலையும், பாலத்தை முழுமை அடைய செய்ய முடியாமலும் இருந்தது.

தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின்பு இது குறித்து பாதுகாப்பு துறையிடம் தொடர்ந்து பேசப்பட்டது. அதன் பின் பல்வேறு கட்ட தொடர் நடவடிக்கைகளுக்கு பின் ராணுவத் துறைக்கு சொந்தமான நிலத்தில் மதிப்பான 8.45 கோடி ரூபாய் சம மதிப்பிலான உள்கட்டமைப்பை அமைத்து தருகிறோம் என்பதன் அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செயலாக்கம் ஏற்பட்டதனை தொடர்ந்து அணுகு சாலை அமைக்க கடந்த ஆண்டு ராணுவம் நிலம் கிடைக்கப்பெற்றது. அதனையடுத்து ரூ.3.53 கோடி மதிப்பீட்டில் அரிஸ்டோ மேம்பாலத்தில் மன்னார்புரம் பகுதியில் அணுகு சாலை ராணுவத்தின் நிலத்தை ஒட்டிய சுற்றுச்சுவர் சேவை, சாலை, மழை நீர் வடிகால் அமைப்பு போன்ற கட்டுமான பணிகளை துவக்கி வைக்கப்பட்டது. அப்பணிகள் தற்சமயம் முடிவுற்றதையடுத்து பாலத்தின் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு பாலத்தில் சாலை, பாதுகாப்பு சிக்னல்கள் அமைக்கப்பட்டு நிறைவுற்ற இ்ப்பாலம் இன்று திறக்கப்பட்டது.

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, மக்களவை திருச்சி தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் ஆகியோர் அதை திறந்து வைத்தனர். பாலம் திறக்கப்பட்டவுடன் 300-க்கும் மேற்பட்ட போலீசார் இருசக்கர வாகனங்களில் பேரணியாக பாலத்தை கடந்து சென்றனர். இந்த விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகரா காவல் ஆணையர் சத்திய பிரியா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.