இனி விண்வெளி டூருக்கு மட்டும் இல்ல… திருமணமும் செய்யலாம்..!!

திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு பெரிய நிகழ்வாகும். திருமணம் இரு நபர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைகிறது. திருமண தினத்தன்று நடக்கும் சில சுவாரசியமான நிகழ்வுகள் நம் வாழ்வில் எப்போதும் நம் நினைவை விட்டு நீங்காமல் இருக்கும். இளைய தலைமுறையிடம் தங்கள் திருமணத்தில் ஏதாவது ஒரு புதுமையை புகுத்த வேண்டும் என்ற ஆர்வம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மெரிட் தீவை தலைமைடமாக கொண்டு செயல்படும் ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் … Read more

நாளை சென்னை வரவிருந்த ராகுல்காந்தியின் பயணம் திடீர் ரத்து..!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா திரு. ராஜிவ்காந்தி அவர்களின் 32-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் நாளை (21.5.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்ச்சியில் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. தவிர்க்க முடியாத காரணங்களால் அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி, நாளை ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ் காந்தி அவர்களின் நினைவிடத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி … Read more

அசைவம் சாப்பிட்டபின் கோவிலுக்கு செல்லக்கூடாது ஏன் தெரியுமா?

பொதுவாகவே உணவுக்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உணவு அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவதும், உணவில் காரம் சேர்த்து சாப்பிட்டால் கோபம் வருவதும் இதற்கு உதாரணமாக கூறலாம். அசைவ உணவுகள் ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அது உடலில் மந்தநிலையை ஏற்படுத்தும். கோவிலுக்குச் செல்லும்போது சுத்தமாகச் செல்ல வேண்டும் என்று கூறுவது உடலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் பொருந்தும். மனதளவில் மந்தநிலையில் உள்ள ஒருவர் சு ட்சும சக்திகள் நிலவும் கோவிலுக்குள் செல்லும்போது அந்த சக்திகளை … Read more

ரூ.2000 நோட்டுகளை டெபாசிட் செய்ய கட்டுப்பாடுகள் உள்ளதா ?

ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகள் ரூ. 2000 நோட்டுகள் விநியோகத்தை நிறுத்த உத்தரவிட்டுள்ள ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று கூறியுள்ளது. மே 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ரிசர்வ் வங்கி கிளைகளில் ரூபாய் 20 ஆயிரம் வரை ரூபாய் 2000 நோட்டுக்களை பொதுமக்கள் மாற்றிக் கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 20,000 வரை மட்டுமே … Read more

விஷச்சாராயம் குடித்தவர்களில் மேலும் ஒருவர் பலி!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே விஷச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். கடந்த வாரம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தை சேர்ந்தவர்கள் விஷச்சாராயம் குடித்தத்தில் அடுத்தடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. விஷச்சாராயம் குடித்தவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார். … Read more

ஐஷ்வர்யா ராஜேஷ் சர்ச்சையை சூப்பராக ஹேண்டில் செய்த ரஷ்மிகா!!

புஷ்பா படத்தின் வள்ளி கதாபாத்திரம் குறித்து ஐஷ்வர்யா ராஜேஷ் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தை ரஷ்மிகா மந்தனா அற்புதமாக கையாண்டுள்ளார். சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம், பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நடிகை ராஷ்மிகா ‘ஸ்ரீவள்ளி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று கொடுத்தது. மேலும் ரசிகர்கள் … Read more

2000 ரூபாய் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “நச்” விமர்சனம்!!

2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறு வரிகளில் நச் என்று விமர்சித்துள்ளார். புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படும் என்று நேற்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. வரும் 23ஆம் தேதியிலிருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து வரவு வைத்துக் கொள்ளலாம் என்றும், ஒரு நாளைக்கு ஒரு நபர் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்ற … Read more

வெளியானது அமைச்சர்கள் பட்டியல்!!

கர்நாடகாவில் இன்று சித்தராமையா, டி.கே.சிவகுமார் உடன் 8 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர். கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்கிறார். பெங்களூருவில் மிக பிரமாண்டமாக பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. நீண்ட இழுபறிக்கு பிறகு கர்நாடகா முதலமைச்சர் விவகாரம் முடிவுக்கு வந்தது. காங்கிரஸ் தலைமையிடம் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவகுமார் துணை முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இருவரும் இன்று மதியம் 12.30 மணிக்கு பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் நடைபெறும் விழாவில் பதவி … Read more

திருப்பதியில் லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்ற ஊழியர்கள்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த தேவஸ்தான ஊழியர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். பக்தர்கள் தரிசனம் முடிந்து லட்டு பிரசாதத்துக்காக கவுண்ட்டர்களில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இதை பயன்படுத்தி லட்டுகள் கூடுதல் விலைக்கு வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. தயாரிக்கும் இடத்தில் இருந்து லட்டுகள் தட்டுகளில் விற்பனை கவுண்ட்டர்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் லட்டுகளை திருடி விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தேவஸ்தான … Read more

மல்லிகார்ஜூன கார்கே மகனுக்கு அமைச்சர் பதவி!!

கர்நாடகாவில் இன்று முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்க உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்கிறார். பெங்களூருவில் மிக பிரமாண்டமாக பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. நீண்ட இழுபறிக்கு பிறகு கர்நாடகா முதலமைச்சர் விவகாரம் முடிவுக்கு வந்தது. காங்கிரஸ் தலைமையிடம் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவகுமார் துணை முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இருவரும் இன்று மதியம் 12.30 மணிக்கு … Read more