அடுத்தடுத்து சோகம்.. 19ஆவது வார்டு அதிமுக பெண் வேட்பாளர் உயிரிழப்பு !

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அ.தி.மு.க. பெண் வேட்பாளர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை தருமபுரம் சாலையை சேர்ந்தவர் ஜெயராமன் என்பவரின் மனைவி அன்னதாட்சி(64). இவர் நகர்மன்ற பதவிக்காக மயிலாடுதுறை நகராட்சி 19ஆவது வார்டில் அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரம் மேற்கொண்டு வந்தார். நேற்று காலை அதிமுக தொண்டர்களுடன் வாக்கு சேகரித்துள்ளார். தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று விரதம் இருந்துள்ளார். … Read more

டாக்சி ஓட்டுநர் இறப்பில் திடீர் திருப்பம்.. விஷ ஊசி செலுத்தி கொலை செய்தது அம்பலம் !

மர்மமான முறையில் கால் டாக்ஸி ஓட்டுனர் உயிரிழந்த விவகாரத்தில், விஷ ஊசி செலுத்தி கொலை செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.   கோவையில் உள்ள வடவள்ளி ஓணாப்பாளையம் பகுதியில் டாக்சி ஓட்டுனர் சனு என்பவர் கடந்த 9ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். அவரது உடலில் பல்வேறு காயங்கள் இருப்பதால், விசாரணை நடத்தக்கோரி உறவினர்கள் மற்றும் சக டாக்சி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது உடலைவாங்க மறுப்பு தெரிவித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை … Read more

ஒரு பள்ளி தலைமை ஆசிரியர் பண்ற வேலையா இது ?

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட மேலாரணி மதுரா, தாங்கல் கிராமத்தில் உள்ள  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 55 மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக காளியப்பன் (வயது 55) மற்றும் ஒரு ஆசிரியை பணியாற்றி வருகின்றனர் . இந்நிலையில் பள்ளித் தலைமையாசிரியர் காளியப்பன் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக கூறி சாலையில் திடீரென 40-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . சம்பவ … Read more

பெங்களூரு நகரில் இரண்டு வாரங்களுக்கு தடை..!!

கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் நேற்று சிவமொகா, பாகல்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் போலீஸ் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கூட்டத்தை கலைத்தனர். இதைதொடர்ந்து 3 தாலுகாக்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.நிலைமை கட்டுக்கடங்காமல் செல்கிறது. இதனால் 3 நாட்களுக்கு அனைத்து உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட கர்நாடக முதல்வர் உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது  இந்நிலையில், கர்நாடக அரசின் ஒரே சீருடை … Read more

பர்தா விவகாரம்.. கைது செய்யப்பட்டவர்கள் மாணவர்கள் அல்ல.. உள்துறை அமைச்சர் தகவல்..!

கர்நாடகாவில் பர்தா விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் நேற்று சிவமொகா, பாகல் கோட்டையில் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால், போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கூட்டத்தை கலைத்தனர். இதை தொடர்ந்து, 3 தாலுகாக்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பர்தா விவகாரம் குறித்து கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “பர்தா விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மாணவர்கள் அல்ல. கர்நாடகாவில் … Read more

அனுமதி பெற்றாலும் விளம்பரம் செய்யக்கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!

சுவர்களில் தேர்தல் விளம்பரம் செய்ய அனுமதி இல்லை என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, பொது இடங்களில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான பதாகைகள் வைத்தல், கொடிகளை நாட்டுதல், சின்னங்களை வரைதல், சுவரொட்டிகளை ஒட்டுதல் போன்றவற்றை மேற்கொள்ளக்கூடாது. இதுதொடர்பான வரைமுறைகளை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பின்பற்ற உத்தரவிடப்படுகிறது. அதன்படி, எந்த ஒரு … Read more

காணாமல் போனது ‘லாக்டவுன்’.. 3 நாட்களுக்கு பிறகு மீட்டனர் போலீசார்..!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் கிஷோர். இவரது மனைவி புத்தினி. இவர்களுக்கு ஆகாஷ் (8), பிரகாஷ் (6), துர்கி (5) மற்றும் லாக்டவுன் என்ற 1 1/2 வயது குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக சென்னை அம்பத்தூர் பகுதியில் கட்டுமான வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி கணவன் – மனைவி இருவரும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர்கள் தங்கியிருந்த ஷெட்டுக்குள் கட்டிலில் படுத்திருந்த குழந்தை லாக்டவுன் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து … Read more

எண்ணெய் வயலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் திடீரென வெடித்துச் சிதறியது..!!

நைஜீரியாவின் தென்மேற்கிலுள்ள நைஜர் டெல்டா பகுதியில் எண்ணெய் வயல் உள்ளது. இந்த பகுதியில் ஷேபா ஆய்வு மற்றும் உற்பத்தி நிறுவனத்திற்கு சொந்தமான மிதக்கும் எண்ணெய் உற்பத்தி, சேமிப்பு மற்றும் இறக்கும் கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. 2 மில்லியன் பீப்பாய்கள் வரை எண்ணெய் சேமித்து வைக்கும் திறன் கொண்ட அந்த டிரினிட்டி ஸ்பிரிட் என்ற கப்பல் நேற்று காலையில் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் கப்பல் தீப்பிடித்து, கரும்புகை வெளியேறியது. கப்பலில் இருந்த ஊழியர்களின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை. … Read more

கொரோனா வைரசால் ஆண்களின் கருவுறச்செய்யும் ஆற்றல் குறைகிறதா..?

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பெண்கள் கருத்தரிப்பது குறைகிறது, கொரோனா வைரஸ், ஆண்களின் கருவுறச்செய்யும் ஆற்றலைக் குறைக்கிறது என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின. இதுபற்றி அமெரிக்காவின் ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ஆண்டனி பாசி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, “கொரோனா தடுப்பூசி, கர்ப்பம் தரிப்பதை குறைக்கிறது என்பது தவறான தகவல் ஆகும். கொரோனா தடுப்பூசி கருவுறுதலை எதிர்மறையாக பாதிக்காது என்பதை புதிய தரவுகளும், முந்தைய ஆய்வுகளும் காட்டுகின்றன. கர்ப்பம் தரிப்பதை தடுப்பூசிகள் குறைக்கும் … Read more

இன்று நடக்க இருக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது

சென்னை தி.நகரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, “நீட் மசோதாவை திருப்பி அனுப்பியதற்கான காரணத்தை அரசுக்கு ஆளுநர் தனியே அனுப்பியிருக்கிறார்; இதை இதுவரை தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. நீட் விவகாரத்தில் பாஜக மீது எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. அதிமுக அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.  நீட் தேர்வால் கிராமப்புற, ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவு பாதிக்கப்படவில்லை. எதன் அடிப்படையில் நீட் தேர்வு சமூக நீதிக்கு … Read more