அசோக் செல்வனின் “நித்தம் ஒரு வானம்” : போஸ்டர் வெளியிட்டார் துல்கர் சல்மான் !

வியாகம் 18 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ரா.கார்த்திக் இயக்க அசோக்செல்வன் நடிக்கும் படம் “நித்தம் ஒரு வானம்”.

ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர்.

கோபி சுந்தர் இசையமைக்க, விது அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆண்டனி எடிட்டிங் செய்கிறார்.

படம் குறித்து இயக்குநர் ரா. கார்த்திக், “நம் மனதின் நேர்மறை எண்ணங்களையும், அன்பையும், மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கும் ஒரு பயணத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் இது” என்றார்.

இந்நிலையில் டைட்டில் லுக் போஸ்டரை பிரபல நடிகர் துல்கர் சல்மான் இன்று வெளியிட்டார்.

வியாகம் 18 ஸ்டுடியோஸின் அஜித் அந்தரே, படம் குறித்து கூறுகையில்..,

“தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் வெளியாகிறது. சென்னை, குலுமனாலி, சிக்கிம், கோவா, டெல்லி, சண்டிகர், கொல்கத்தா, விசாகப்பட்டினம், ஹைதராபாத், மதுரை, பொள்ளாச்சி என இந்தியாவின் பல்வேறு அழகான இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

படத்தின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இசை வெளியீடு பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்” என்றார்.

தயாரிப்பாளர் – ஸ்ரீநிதி சாகர் (ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட்), வயகாம் 18 ஸ்டூடியோஸ்
இயக்குநர் – Ra.கார்த்திக்
ஒளிப்பதிவு – விது அய்யனா
இசை – கோபி சுந்தர்
கலை – எஸ். கமலநாதன்
படத்தொகுப்பு – ஆண்டனி
சண்டைப் பயிற்சி – விக்கி
எக்ஸிகுயுடிவ் புரொடுயுசர் – S.வினோத் குமார்
நடனம் – லீலாவதி குமார்
பாடல்கள் – கிருத்திகா நெல்சன்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.