சுதந்திர தின கொண்டாட்டம்: இனிப்புகள், வாழ்த்துக்களைப் பரிமாறிய இருநாட்டு வீரர்கள்

புதுடெல்லி: சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு வீரர்கள் இனிப்புகள், வாழ்த்துக்களைப் பரிமாறி கொண்டனர். நாட்டு விடுதலையின் 75ஆம் ஆண்டு விழாவையொட்டிப் பஞ்சாப் மாநிலம் அட்டாரி – வாகா எல்லைச் சாவடியில் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் வீரர்களும், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரும் ஒருவருக்கொருவர் இனிப்புகளைப் பரிமாறி வாழ்த்துத் தெரிவித்துக்கொண்டனர். பாகிஸ்தானின் சுதந்திர நாள் இன்றும், இந்தியாவின் சுதந்திர நாள் நாளையும் கொண்டாடப்படும் நிலையில் நல்லெண்ண நடவடிக்கையாக இருநாட்டு வீரர்களும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் … Read more

தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் வரும் 18-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலில் 60 கி.மீ. வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் தொடர்புடைய ஒருவர் கைது

சென்னை: அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள தனியார் வங்கிக்கு பட்டப்பகலில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், வங்கிக்குள் புகுந்து கத்தி முனையில் வங்கி ஊழியர்களை கட்டுப்படுத்தி வங்கியில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் சுமார் 20 … Read more

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 15

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 15 பா. தேவிமயில் குமார் இன்னொரு நாள் வரும் உலகில் போர்கள் இல்லாத வரலாறு வேண்டும்! பேரிடர் இல்லாத பூமி வேண்டும்! அனாதை இல்லங்கள் இல்லாத நிலை வேண்டும்! பண்ட மாற்று முறையை பரவலாக உலகம் ஏற்க வேண்டும்! கோடுகள், இடையில் இல்லாத நாடுகள் வேண்டும்! தொழிற் புரட்சிக்குப் முன்னான உலகம் வேண்டும்! சட்டங்கள் இல்லாத ஒழுங்கு முறை வேண்டும்! தங்கம், வைரம் அறியா ஆதி உலகம் வேண்டும்! … Read more

கார் மீது வீசப்பட்ட செருப்பு பத்திரமாக உள்ளது – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: கார் மீது வீசப்பட்ட செருப்பு பத்திரமாக உள்ளது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. அங்கு, அவரது உடலுக்கு தியாகராஜன், கலெக்டர் அனீஷ் சேகர், மேயர் இந்திராணி, அதிகாரிகள், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், விமான நிலையத்தில் இருந்து கிளம்பி செல்லும் போது தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு … Read more

தர்மபுரி மலை கிராமமான வத்தல்மலைக்கு முதன்முறையாக பொது போக்குவரத்து சேவை

தர்மபுரி: தர்மபுரி மலை கிராமமான வத்தல்மலைக்கு முதன்முறையாக பொது போக்குவரத்து சேவை துவங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். https://patrikai.com/wp-content/uploads/2022/08/qjdsUm_usaN3l_zB.mp4 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், முதலமைச்சர் அவர்கள் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமமான வத்தல்மலைக்கு முதன்முறையாக பொது போக்குவரத்து சேவை நேற்று தொடங்கப்பட்டது. இதுபோன்ற செயல்களைச் செய்ய ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்தால், அந்த மகிழ்ச்சியான முகங்களைப் பார்க்கும்போது அது மிகுந்த திருப்தியைத் தருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஜகவை விட்டு விலகுவதாக மதுரை பாஜக நிர்வாகி மருத்துவர் சரவணன் அறிவிப்பு

மதுரை: பாஜகவை விட்டு விலகுவதாக மதுரை பாஜக நிர்வாகி மருத்துவர் சரவணன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பாஜகவை விட்டு விலகுகிறேன். பாஜகவில் அரசியல் செய்ய விரும்பவில்லை மத அரசியலில் ஈடுபடுவதில் உடன்பாடு இல்லை என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசியது ஏற்கத்தக்கதல்ல என்றும், அண்ணன் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் அவரது வீட்டிற்கு நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினேன் என்று கூறினார்.

உலகளவில் 59.45 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 59.45 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 59.45 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 64.53 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 56.68 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 14: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 85-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 85-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவில்

ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவில், நாகை மாவட்டம் திருவெண்காடு சிவாலய மேற்கு கோபுர வாசலில் இருந்து, மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கீழை திருக்காட்டுப்பள்ளி என்ற இந்த தலம். புதன் தலமான திருவெண்காடு செல்பவர்கள் அருகே உள்ள இந்தத் தலத்தையும் தரிசிக்கலாம். சோழ பெருவள நாட்டின் காவிரியின் வடகரை திருத்தலங்களில் 12-வது தலம் கீழை திருக்காட்டுப்பள்ளி. இத்தலத்திற்கு ‘ஆரண்யஸ்வரம்’ என்ற பெயரும் உண்டு. இங்குள்ளது ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவில். இறைவனின் திருநாமம் ஆரண்ய சுந்தரேஸ்வரர். இறைவியின் திருநாமம் … Read more