அரபி குத்து – சிலுவை அடையாளம் – பீஸ்ட் ஜோசப் விஜய் – அர்ஜுன் சம்பத் என்ன சொன்னார் தெரியுமா?

அரபி குத்து பாடலில் விஜய் சிலுவை அணிந்து இருப்பது வரவேற்க்கதக்கது என இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ்   தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் வெளியாக உள்ளது. இந்நிலையில், நேற்று முன் தினம் இந்த படத்தின் அரபி குத்து பாடல் வெளியானது.

இந்த பாடலை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த பாடலில் விஜய் சிலுவையுடன் இருப்பதாக சிலர் சர்ச்சையை கிளப்பினர். இந்நிலையில், இந்து மக்கள் கட்சியி அந்த பாடலில் விஜய் சிலுவை அணிந்துருப்பதை வரவேற்ப்பதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், பீஸ்ட் பாடலில் ஜோசப் விஜய் சிலுவை அணிந்துருப்பது வரவேற்க்கதக்கது. அவரது மத அடையாளத்தை தைரியமாக அவர் வெளிப்படுத்துகிறார். இதில், என்ன தவறு இருக்கிறது. இதனை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது. இந்தியாவில் அனைத்து மதத்திற்கும்  மத சுகந்திரம் உள்ளது. எனினும் தேவையற்ற பிரச்சாராங்கள் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.