மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் சில்மிஷம்.! வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை.!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் சில்மஷத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வழுதலகுணம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (31). இவர் மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை ஏமாற்றி கடந்த 2018ஆம் ஆண்டு பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது சிறுமியின் தந்தை வந்ததால் அவரைப் பார்த்த மணிகண்டன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து சிறுமியின் தந்தை இது குறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். … Read more

11ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம்.! போக்சோவில் உறவினர் கைது.!

கோவை மாவட்டத்தில் பதினோராம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த உறவினரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்த 29 வயது உடைய வாலிபர் ஒருவர் கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் உள்ள, அவரது தாய் மாமா வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்பொழுது தாய் மாமன் மகளான 16 வயதுடைய 11 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் … Read more

பழிவாங்குவதற்காக உணவில் தைலத்தை கலந்த பெண் பணியாளர் கைது.!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அருகே செண்பகனூர் பகுதியை சேர்ந்தவர் அனிஸ். இவர் மனைவி மலர்விழி அந்த பகுதியிலுள்ள கொடைக்கானல் இங்கிலீஸ் கிளப்பில் சமையல் பிரிவில் பணி புரிந்து வருகிறார்.  இவர் அங்கு, சமைக்கப்படும் மீதி உணவினை அடிக்கடி வீட்டுக்கு எடுத்து வந்துள்ளார். இதை அங்குள்ள பாதுகாவலர்கள் கண்டறிந்து அவரை, சமையல் பிரிவிலிருந்து மாற்றப்பட்டு வேறு பணிக்கு அனுப்பி வைத்தனர்.  இதனால் ஆத்திரமடைந்த மலர்விழி தன்னை மற்றொரு பிரிவிற்கு மாற்ற காரணமாக இருந்த பணியாளர்களை பழிவாங்க திட்டம் … Read more

ஊஞ்சல் விளையாடியபோது நேர்ந்த சோகம்.! சேலையில் கழுத்து இறுகி சிறுவன் பலி.!

ஈரோட்டில் ஊஞ்சல் விளையாடியபோது சேலையில் கழுத்து இறுகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு வெங்கிடுசாமி தெரு பகுதியை சேர்ந்தவர் அமீர் அப்பாஸ். இவரது மனைவி சகிலாபானு. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை கணவன்-மனைவி இருவரும் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்பொழுது மகன் சாகுல் ஹமீது (12) மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளான். இதையடுத்து, கணவன் மனைவி இருவரும் வீட்டிற்கு வந்த போது கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்துள்ளது. … Read more

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று 08:30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென்கிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மெதுவாக மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை இலங்கை கடற்கரை பகுதிகளை … Read more

அதிரடி அறிவிப்பு… இன்று முதல் 3 நாட்களுக்கு மணல் லாரிகள் வேலை நிறுத்தம்..!!

சரக்கு லாரிகளில் அதிகாரம் ஏற்ற அரசு ஊக்குவிப்பதை கண்டித்து இன்று முதல் 3 நாட்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.  இதுகுறித்து அனைத்து மணல் லாரி உரிமையாளர் சங்கம் கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் பேசியதாவது “தமிழகத்தில் நாள்தோறும் விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகிறது. இதற்குக் காரணம் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 5 மடங்கு அதிகமாக லாரிகளில் கனிம வளங்கள் ஏற்றுவது தான். கனிம வளங்களை முறைகேடக கொள்ளை போவதோடு சாலைகளும் லாரிகளும் … Read more

மாநகர பேருந்துகளை ஓட்டுனர் மட்டும் தான் இயக்க வேண்டும் – போக்குவரத்துத் துறை அதிரடி அறிவிப்பு.!

மாநகரப் போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- “நம்முடைய மாநகர போக்குவரத்துக் கழக கிளைகளில் ஒரு சில இடங்களில் பேருந்து நடத்துநர்கள் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை இயக்குவதாக தகவல் வருகிறது.  இந்த தகவலை உறுதி செய்யும் வகையில், மத்திய பணிமனையில் கடந்த மாதம் 28.01.2023 அன்று பேருந்து நடத்துநர் ஒருவர் ஓட்டுநருக்கு பதிலாக பேருந்தினை எடுத்து டீசல் பங்கினை இடித்து சேதபடுத்தியுள்ளது.  இதன் காரணமாக, எந்த ஒரு சூழ்நிலையிலும் ஓட்டுநரை தவிர மற்றவர்கள் … Read more

குரோம்பேட்டை : செல்போன் கடையில் பயங்கர தீ விபத்து.!

குரோம்பேட்டையில் செல்போன் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. சென்னை குரோம்பேட்டை ராதா நகர் பகுதியில் ரமேஷ் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு ரமேஷ் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து நேற்று காலை திடீரென கடையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள், இதுகுறித்து தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து … Read more

தேனி : கழிவறையை சுத்தம் செய்யும் அரசுப்பள்ளி மாணவர்கள் – வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.! 

தேனி மாவட்டத்தில் உள்ள சக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகரில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இதில், 180-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளும்,  தலைமை ஆசிரியர் உள்பட 12 ஆசிரியர்களும் உள்ளனர்.  இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ காட்சி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.  அந்த வீடியோவில், பள்ளி சீருடையில் இருக்கும் இரண்டு மாணவர்கள் குழாயில் தண்ணீர் பிடித்து கழிவறையில் ஊற்றி சுத்தம் செய்துவிட்டு, பின்னர் அந்த தண்ணீர் … Read more

#மதுரை: மனைவியுடன் கள்ளத்தொடர்பு… இந்து மக்கள் கட்சி நிர்வாகியை போட்டு தள்ளிய ஏட்டு..!!

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரம் அருகே இந்து மக்கள் கட்சி நிர்வாகி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சோழஅழகுபுரம் அடுத்த வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் இந்து மக்கள் கட்சியின் தென் மாவட்ட துணை செயலாளராக இருந்து வருகிறார். இவர் ஜெய்ஹிந்த்புராம் அருகே நகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு தனது கடை அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது பின்னால் வந்த மர்ம நபர்கள் அறிவால் மற்றும் கற்களை கொண்டு … Read more