ஜேர்மனியில் துப்பாக்கிச்சூடு – இருவர் மரணம்., பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி


ஜேர்மனியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்த சம்பவம் பொலிஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் Baden-Württemberg மாநிலத்தில் உள்ள கிர்ச்ஹெய்மில் ஸ்டட்கார்ட்டில் இருந்து தென்கிழக்கே 35 கிலோமீட்டர் (22 மைல்) தொலைவில் உள்ள Kirchheim அண்டர் டெக் என்ற இடத்தில் உள்ள ஷாப்பிங் சென்டரில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி புதன்கிழமை இரவு 7:30 மணியளவில் இந்த சம்பவம் நடக்க, அவ்வழியே சென்றவர்கள் துப்பாக்கி சத்தம் கேட்டதில் பயந்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, ஷாப்பிங் சென்டரில் பணிபுரிந்த 58 வயதுடைய பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இரண்டு முறை துப்பாக்கிசூடும் சுத்தம் கேட்டதால், அக்கம் பக்கத்தில் பொலிஸார் ஆய்வு நடத்தினர். அப்போது, ஷாப்பிங் சென்டரின் நுழைவாயிலுக்கு எதிரே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இருந்த காரில் மற்றோரு ஆண் இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

[]

பொலிஸார் சம்பவ இடத்தை ஆய்வு செயத்தில், காரில் இறந்து கிடந்த நபர் தான் அப்பெண்ணை சுட்டு கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் மூன்றாவது நபரின் தலையீடு இல்லை என உறுதி செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து, காரில் உயிரிழந்த நபர் குறித்தும் அவர் பயன்படுத்திய துப்பாக்கியையும் பொலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது பொலிஸாருக்கு அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் வெளிவந்தன.

உயிரிழந்த அந்த நபர், Baden-Württemberg மாநில குற்றப்பிரிவு பொலிஸ் அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர் என்றும், அவர் தன்னை விட்டுப் பிரிந்திருந்த தனது மனைவியை முதலில் கொன்றுள்ளார், பின்னர் தனது சேவை துப்பாக்கியால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்போதைய விசாரணையின் படி, இந்த சம்பவத்தின் நோக்கம் தனிப்பட்ட அல்லது குடும்பப் பிரச்சினையாக இருக்கும் என நம்பப்படுகிறது.

சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் இருந்தால், தங்களிடம் உள்ள கூடுதல் தகவல்களுடன் முன்வருமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.