Tamil News Today LIVE: திமுகவில் இருந்து 45 பேர் நீக்கம்: பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

Petrol and Diesel Price: சென்னையில் 106-ஆவது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் ரூ.101.40-க்கும், டீசல் ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamilnadu News Update: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஓய்ந்தது. வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. பாதுகாப்புக்கு சுமார் 1 லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பிரச்சாரத்துக்குத் தடை: நேரடி பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், வேட்பாளர்கள் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்யவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதுபோன்ற புகார் வந்தால் சம்பந்தப்பட்ட வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நீர்வளம் மாசு: காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலம் மற்றும் நீர்வளம் மாசடைந்துள்ளது என்று சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையிலான உயர்மட்ட தொழில்நுட்ப குழு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

நாடு திரும்பிய மீனவர்கள்: 2021 டிசம்பா் மாதம் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடைச் சேர்ந்த 47 மீனவா்கள் நாடு திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் மீன்வளத் துறை அதிகாரிகள் மீனவர்களை வரவேற்றனர். தனி வாகனங்களில் மீனவர்கள் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

India News Update: கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரத்தால் போராட்டம் நேற்றும் நடந்தது. இதனால், கல்லூரிகள் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டனர்.

அமரீந்தர் சிங் நீக்கம் ஏன்?

ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என கேட்டதற்கு மின்சார நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் தர முடியாது என்றார் அமரீந்தர் சிங். எனவே அவர் முதல்வர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

Corona Update: தமிழகத்தில்1,252 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 4.27 கோடி பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

உலகளவில் இதுவரை 41.99 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 34.38 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 58.80 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates

10:23 (IST) 18 Feb 2022
இந்தியாவில் 174.64 கோடி பேருக்கு தடுப்பூசி

இந்தியாவில் இதுவரை 174.64 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டுள்ளன. ஒரே நாளில் 37.86 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


10:11 (IST) 18 Feb 2022
கொரோனாவுக்கு மேலும் 492 பேர் பலி

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மேலும் 492 பேர் உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 5,10,905 ஆக அதிகரித்துள்ளது.


09:53 (IST) 18 Feb 2022
திமுகவில் இருந்து 45 பேர் நீக்கம்

திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் 45 பேர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த போட்டி வேட்பாளர்கள் நீக்கப்பட்டதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.


09:40 (IST) 18 Feb 2022
புதிய ரயில் பாதை: பிரதமர் திறந்து வைப்பு

தானே – திவா இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதையை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.


09:31 (IST) 18 Feb 2022
பேச்சுவார்த்தையே தற்போதை தேவை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்

ரஷியா-உக்ரைன் விவகாரத்தில் ஜனநாயக பேச்சுவார்த்தையே தற்போதைய தேவை என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.


09:17 (IST) 18 Feb 2022
இன்று 2-ஆவது டி20 கிரிக்கெட்: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதல்

கொல்கத்தா ஈடன்கார்டனில் இன்று 2ஆவது டி20 போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகிறது. 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.


09:06 (IST) 18 Feb 2022
இந்திய சிறைகளில் இருந்து பாகிஸ்தானைச் சேர்ந்த 12 பேர் விடுதலை

இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 12 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.


08:49 (IST) 18 Feb 2022
தமிழக அரசு மருத்துவமனையில் ரோபோட்டிக் சிகிச்சை மையம்!

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் உள்ள ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.


08:40 (IST) 18 Feb 2022
ராஜஸ்தானில் நில அதிர்வு

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் அருகே இன்று காலை 8 மணிக்கு 3.8 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு பதிவாகியுள்ளது என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


08:25 (IST) 18 Feb 2022
நதிநீர் இணைப்புத் திட்டம்: டெல்லியில் இன்று ஆலோசனை

நதிநீர் இணைப்பு திட்டம் தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட 5 தென்மாநில நீர்வளத் துறை அதிகாரிகளுடன் மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. டெல்லியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் சந்தீப் சக்சேனா பங்கேற்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.