கட்டணத்தை குறைக்க சொன்னது குத்தமா.. 1.94 லட்சம் கோடி நஷ்டம்.. சீன அரசின் கிடுக்குபிடி..!

ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு டெக் நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவும், சீனாவில் பெரிய அளவில் அதிகரித்து வரும் மோனோபோலி தன்மையைக் குறைக்கக் கடந்த சில வருடங்களாகவே அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், டிஜிட்டல் சேவை துறை மீது தனது கவனத்தைத் திருப்பியுள்ளது சீன அரசு.

உணவு டெலிவரி சேவை

சீனாவில் உணவு டெலிவரி சேவை துறையில் பல நிறுவனங்கள் இருந்தாலும், மெய்துவான் (Meituan) என்னும் நிறுவனம் தான் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. சீனாவின் உணவு டெலிவரி வர்த்தகத்தில் குறிப்பாகப் பெரும் நகரங்களில் குவிக் டெலிவரி சேவையில் Meituan மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செய்து வரும் காரணத்தால் இந்நிறுவனத்தின் வருமானமும், மதிப்பீடும் அதிகம்.

சீன அரசு

சீன அரசு

இந்நிலையில் சீன அரசு கொரோனா தொற்றுக் காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட உணவகங்களின் செலவுகளையும், சுமையை குறைக்கச் சில முக்கியமான தளர்வுகளை ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் வாயிலாக அளிக்க முடிவு செய்தது சீன அரசு.

Meituan நிறுவனம்
 

Meituan நிறுவனம்

இதற்காகச் சீன அரசு Meituan உட்பட அனைத்து உணவு டெலிவரி நிறுவனங்களும் உணவகங்களுக்கான கட்டணத்தைக் குறைக்க உத்தரவிட்டது. அதாவது ஆன்லைன் வாயிலாக வர்த்தக அளிப்பதற்காக உணவகங்களிடம் இருந்து Meituan போன்ற நிறுவனங்கள் பெறும் கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என உத்தரவு வெளியாகியுள்ளது.

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

ஆன்லைன் டெலிவரி துறையில் இருக்கும் நிறுவனங்கள் பொதுவாகவே கடுமையான நிதிநெருக்கடியில் தான் வர்த்தகம் செய்யும், இப்படியிருக்கும் போது சீன அரசின் இப்புதிய உத்தரவு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

26 பில்லியன் டாலர்

26 பில்லியன் டாலர்

சீன அரசு அறிவிப்பைத் தொடர்ந்து Meituan நிறுவன பங்குகள் 15 சதவீதம் சரிந்து சுமார் 26 பில்லியன் டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் 1,94,168 கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பை இழந்துள்ளது. இதன் மூலம் Meituan கடந்த சில வருடத்தில் வர்த்தக விரிவாக்கம், சேவை தரம் மேம்படுத்துதல், அதிகளவிலான வேலைவாய்ப்பு அளித்தது மூலம் உருவாக்கிய சந்தை மதிப்பீடு தற்போது மாயமாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட உணவகங்கள்

பாதிக்கப்பட்ட உணவகங்கள்

சீன அரசு ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்காக வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் உணவகங்களுக்கு, ஆன்லைன் டெலிவரி சேவை நிறுவனம் முன்னுரிமை கட்டணம் அளிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 7 மாதத்தில் Meituan நிறுவன பங்குகள் தொடர் சரிவை எதிர்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

https://tamil.goodreturns.in/world/chinese-billionaire-meituan-s-ceo-wang-xing-lost-rs-18-365-crore-for-sharing-a-1100yr-old-poem-023559.html

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

China Meituan lost $26 billion mcap; China govt asks food delivery apps to cut fees after pandemic

China Meituan lost $26 billion mcap; China govt asks food delivery apps to cut fees after pandemic கட்டணத்தைக் குறைக்கச் சொன்னது குத்தமா.. 1.94 லட்சம் கோடி நஷ்டம்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.