புடின் புது "ஸ்கெட்ச்".. ராணுவத் தாக்குதல் வேகம் திடீர் குறைப்பு.. உக்ரைன் குழப்பம்!

ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலின் வேகத்தைக் குறைத்திருப்பதாக
உக்ரைன்
ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் நெருக்கடி அதிகரித்து வருவதால் ரஷ்யா தனது தாக்குதல் வேகத்தை குறைத்து விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இருப்பினும், அணு ஆயுதங்களை சிறப்பு தயார் நிலையில் வைக்குமாறு ரஷ்ய ராணுவத்துக்கு
புடின்
உத்தரவிட்டுள்ளதால், அவரது உத்திகளில் ஏதாவது மாற்றம் வந்திருக்கிறதா, உக்ரைனைப் பணிய வைக்க வேறு ஸ்கெட்ச் போட்டுள்ளாரா என்ற கேள்விகளும் எழுகின்றன.

ரஷ்ய ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகளும் உக்ரைனைத் தாக்கி வருகின்றன. சர்வதேச கண்டனம், எதிர்ப்பு என எதையும் ரஷ்யா கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து தாக்கி வருகிறது. ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் சரமாரியாக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள போதிலும் அது ரஷ்யாவை கவலைப்படுத்தவில்லை. மாறாக தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது.

ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. ஐரோப்பிய நாடுகள் மூலமாக அவர்களுக்குத் தேவையான ஆயுதங்களை அமெரிக்கா அனுப்பி வருகிறது. இதனால் இரு நாட்டு படையினருக்கும் இடையே போர் உக்கிரமாக உள்ளது. இந்த நிலையில் ரஷ்ய ராணுவம் தனது தாக்குதல் வேகத்தைக் குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அணு ஆயுதங்களை ரெடி பண்ணுங்க.. புடின் திடீர் உத்தரவு.. உருக்குலையுமா உக்ரைன்?

இந்தத் தகவலை உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ளது. பல இடங்களில் ரஷ்யப் படையினரிடம் ஆவேசமும், வேகமும் குறைந்துள்ளதாகவும், அவர்கள் தாக்குதலை மட்டுப்படுத்தி வருவதாகவும் உக்ரைன் படையினர் தெரிவித்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இருப்பினும் புடின் இதுதொடர்பாக ஏதேனும் உத்தரவு பிறப்பித்திருக்கலாம் என்ற கருத்து எழுந்துள்ளது.

இருப்பினும் தங்களது பதில் தாக்குதலில் ரஷ்ய ராணுவத்துக்கு கணிசமான சேதமும், உயிரிழப்பும் ஏற்பட்டிருப்பதால் ரஷ்ய ராணுவம் தனது வேகத்தைக் குறைத்திருக்கலாம் என்று உக்ரைன் கூறுகிறது. பல இடங்களில் ரஷ்ய ராணுவத்துக்கு பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாகவம் உக்ரைன் கூறுகிறது.

உக்ரைனில் போய் படிக்க இந்தியர்கள் குவிவது ஏன்.. “நீட்” தேர்வுதான் காரணம்?

இதற்கிடையே இரு நாட்டுப் பிரச்சினை தொடர்பாக பெலாரஸில் வைத்து ரஷ்யாவும், உக்ரைனும் இன்று பேசுகின்றன. இந்த பேச்சுவார்த்தையில் சுமூக நிலை எட்டப்பட்டால் ரஷ்ய தாக்குதல் ஓயும் இல்லாவிட்டால் வேறு ரூபத்தில் ரஷ்யா தனது தாக்குதலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.