முதல்வரை நேரில் கண்ட பழங்குடியின மக்கள்… நீலகிரியில் நெகிழ்ச்சி சம்பவம்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (22.5.2022) நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், பகல்கோடு மந்து கிராமத்திற்கு நேரில் சென்று அவர்களது குடியிருப்புப் பகுதிகளைப் பார்வையிட்டார். மேலும் அக்கிராமத்தைச் சேர்ந்த தோடர் பழங்குடியின மக்களிடம் அவர்களது வாழ்க்கை, கலாச்சார முறை குறித்து கேட்டறிந்து, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். அப்போது அம்மக்கள் முதலமைச்சர் ஒருவர் தங்கள் பகுதிக்கு வருவது இதுவே முதல் முறை என்றும், தோடர் பழங்குடியின மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதற்கு நன்றியையும், மகிழ்ச்சியையும் … Read more

மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை வார்னிங் – அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்!

72 மணி நேரத்தில் திமுக வாக்குறுதியில் அறிவித்தபடி பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் கோட்டையை முற்றுகையிடுவோம் என, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்து உள்ளார். ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, சென்னை திரும்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை , சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: ஒரு பக்கம் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே இருந்தாலும் கூட மோடி விலையை … Read more

மே 28 வரை மீண்டும் முழு ஊரடங்கு – அரசு அதிரடி அறிவிப்பு!

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இன்று மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்த வைரஸ் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், அது, … Read more

எனக்கு இதுதான் ஆசை: அன்புமணி ஓப்பன் டாக்!

பாமக தலைவராக 25ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள ஜி.கே.மணிக்கு வெள்ளி விழா எடுக்க உள்ளார் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் . இதற்காக சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையிலுள்ள அண்ணா அரங்கத்தில் மே 24ஆம் தேதியன்று விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மே 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பாமக தலைவர் பதவியை அன்புமணி ராமதாஸுக்கு கொடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, செங்கல்பட்டு மத்திய மற்றும் தெற்கு மாவட்ட பாமக பொதுக்குழு … Read more

காதல் வலையில் ராணுவ வீரர் – பாக். பெண் உளவாளிக்கு தகவல்களை பகிர்ந்ததால் கைது!

இந்திய ராணுவத்தின் தகவல்களை பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவாளிக்கு பகிர்ந்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதீப் குமார் . கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் இணைந்த இவர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ராணுவப் பிரிவில் பணியாற்றி வருகிறார். பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவாளிக்கு சமூக வலைதளங்கள் மூலம் ராணுவ ரகசிய தகவல்களை இவர் பரிமாறியதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த நிலையில், கடந்த சில நாட்களாக … Read more

மாணவர்களுக்கு செம குட் நியூஸ் – தமிழக அரசு சூப்பர் திட்டம்!

மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்க, தமிழக பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதில் இருந்து, பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு அதிரடி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இல்லம் தேடிக் கல்வி போன்ற திட்டங்கள் மூலம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக, அரசுப் பள்ளிகளிலும், ஆங்கிலத்தில் வகுப்புகளை எடுக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இந்நிலையில், தமிழகம் … Read more

ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு: அமைச்சர் அறிவிப்பால் ஹேப்பி!

திமுக அரசு பொறுப்பேற்று பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்கு நேரடியாக சென்று மருத்துவ சேவைகள் வழங்குவது இத்திட்டத்தின் பிரதான நோக்கம். இதில் சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள், தன்னார்வலர்கள் போன்றோர் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். அதேபோல் இன்னுயிர் காப்போம் திட்டம் ஆகியவை மூலம் சாலை பாதுகாப்பு தொடர்பாகவும், சாலை விபத்துகளை … Read more

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு – முதல்வர் அதிரடி அறிவிப்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்து அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் உத்தரவிட்டு உள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை பொதுத் துறை நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இந்த நடைமுறை, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத கடைசியில் ஒரே வாரத்தில் 5 முறை பெட்ரோல், டீசல் … Read more

தமிழக கோயில்களில் சட்டவிரோத பணி: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நியமன உத்தரவுகள் இல்லாமல் தமிழக கோயில்களில் சட்டவிரோதமாக செயல் அலுவலர்களாக பணியில் உள்ளவர்களை நீக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள கோயில்களில், முறையான நியமன உத்தரவுகள் இல்லாமல் அரசு ஊழியர்கள், செயல் அலுவலர்களாக பதவி வகித்து வருவதாகவும், சட்ட விரோதமாக செயல் அலுவலர்களாக உள்ள அவர்களை நீக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட கோயில்களுக்கு பரம்பரை அல்லது … Read more

உயிரி உற்பத்திப்பொருள் முனையமாக மாறும் இந்தியா: ஜித்தேந்திர சிங் தகவல்!

உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புதிய தொழில்களுக்கான ஒற்றை தேசிய இணையப் பக்கத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். “ பயோ ஆர்ஆர்ஏபி ” (BioRRAP) என்ற இந்த இணையப்பக்கம் உயிரியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நடவடிக்கைக்கு அனைத்து ஒழுங்குமுறை அனுமதியையும் வழங்கும். இது அறிவியலை எளிதாகக் கொண்டு செல்லுதல், வணிகத்தை எளிதாக்குதல் ஆகியவற்றுக்கு மிகப்பெரும் நிவாரணத்தை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைய பக்கத்தை தொடங்கி வைத்தபின் உரையாற்றிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர … Read more