ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய சோதனையில் 3 பயங்கரவாதிகள் கைது

ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டம் ஹுருட்புரா பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் பாதுகாப்பு படையினர் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த 3 நபர்களைப் பிடித்து பாதுகாப்புப் படையினர் விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் 3 பேரும் பயங்கரவாதிகள் என்பதும், அவர்கள் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.
3 பயங்கரவாதிகளை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.