முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி:இந்திய அணி வெற்றி

சுற்றுலா இலங்கை அணிக்கும்இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ,இந்திய அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம்; நாள்இன்றாகும். முதலாவது இனிங்சிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 174 ஓட்டங்களைப்பெற்றிருந்த நிலையில் தொடர்ந்து இரண்டாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இன்று (06) சகல விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் கடந்த 4-ஆம் திகதி தொடங்கியது. இதில் நாணய சுலற்சியில் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 129.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து ஆட்டத்தை நிறுத்திக்கொண்டமை குறிப்பிடத்தக்கது..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.