உலக நாடுகளில் கொரோனா: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

சீனாவின் வுஹான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52.72 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52 கோடியே 72 இலட்சத்து 33 ஆயிரத்து 817 ஆக அதிகரித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தற்போது தெரிவித்துள்ளது.

போலியான கடிதங்களைச் சமர்ப்பித்து எரிபொருள் பெறுவதற்கு முயற்சி

சிலர் அத்தியாவசிய சேவையெனத் தெரிவித்து போலியான கடிதங்களைச் சமர்ப்பித்து எரிபொருள் பெறுவதற்கு முயற்சிக்கும் ,மோசடி சம்பவங்கள் தெரியவந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். அவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்துக்கொள்ளுமாறு அமைச்சர் மக்களிடம் கேட்டுக்கொண்டார். இதேவேளை,அம்புலன்ஸ் சேவை அத்தியாவசிய சேவை என்பதனால் அம்புலன்ஸ் வண்டிகளுக்கு எரிபொருள் வழங்கும் விடயத்தில் இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்றும் அமைச்சர்  மக்களிடம் கேட்டுக்கொண்டார். அம்புலன்ஸ் வண்டிகளுக்கு எரிபொருள் பெறுவதற்கு முயற்சித்த சந்தர்ப்பங்களில் மக்கள் அதற்கு இடையூறு ஏற்படுத்திய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் … Read more

க.பொ.தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை நாளை – போக்குவரத்து வசதி

கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். சாதாரண தரப் பரீட்சை, நாடளாவிய ரீதியில் 3 ஆயிரத்து 844 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.பரீட்சை அடுத்த மாதம் முதலாம் திகதி நிறைவடையும். ஐந்து லட்சத்து 17 ஆயிரத்து 496 பேர் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இதில் 4 லட்சத்து 7 ஆயிரத்து 129 பேர் பாடசாலைப் பரீட்சார்த்திகளாவர். பரீட்சை அனுமதி … Read more

காஸ் விநியோக தகவல்களை விரைவில் பெற்றுக் கொள்வதற்கு விசேட செயலி 

காஸ் விநியோகம் மற்றும் காஸ் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை பற்றி நுகர்வோரையும் விற்பனை முகவர்களையும் தெளிவூட்டுவதற்கான தொலைபேசி செயலியொன்றை அறிமுகப்படுத்த லிற்றோ காஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த செயலி எதிர்வரும் திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்படுமென்று லிற்றோ காஸ் நிறுவனத்தலைவர் விஜித ஹேரத் கூறினார். இதன் மூலம் நுகர்வோரும் விற்பனை முகவர்களும் குறித்த பிரதேசத்தில் பகிர்ந்தளிக்கப்படும் காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை பற்றிய சரியான தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 காஸ் சிலிண்டர்கள்

கொலன்னாவை பிரதேசத்தில் பேக்கரியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 காஸ் சிலிண்டர்களை கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கைப்பற்றியுள்ளது. வர்த்தகர் சந்தையில் நிலவும் விலையை விட இரட்டிப்பான விலைக்கு காஸ் சிலிண்டர்களை விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை நுகர்வோர் அதிகார சபை முன்னெடுத்துள்ளது.

எரிபொருளை களஞ்சிய படுத்துபவர்களுக்கு எதிராக நாளை முதல் நடவடிக்கை

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்துபவர்களைக் கண்டுபிடிப்பதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படுமென்று பொலிசார் அறிவித்துள்ளனர். இவ்வாறானவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கான பணிகளில் ஈடுபடுபவர்கள் எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு நாளை விசேட வேலைத்திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை,மட்டக்களப்பு மாவட்டங்களில் “டெங்கு” தீவிரம்

திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு வீரியம் அதிகரிப்பு உயர் சிவப்பு வலயங்களாக திருகோணமலை,கிண்ணியா,மூதூர்,உப் புவெளி,குச்சவெளி முதலான சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுகள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் வீ.பிரேமானந்த் தெரிவித்தார். திருகோணமலை பகுதியில் 203 பேரும், மூதூரில் 203 பேரும், கிண்ணியாவில் 77பேரும் ,உப்புவெளியில் 76பேரும்  டெங்கு நோயாளர்ளாக இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.கிண்ணியா சுகாதார பிரிவில் ஒருவர் டெங்கு நோய் காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் இறந்துள்ளார். திருகோணமலை சுகாதார பணிமனையில் இன்று (21) … Read more

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு

மட்டக்களப்பு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டுள்ள வெளி நோயாளர் சிகிச்சை பிரிவின் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமானது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன் வைபவ ரீதியாக இதனை ஆரம்பித்து வைத்தார். காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வெளி நோயாளர் சிகிச்சை பிரிவின் சகல நடவடிக்கைகளும் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதற்காக ஒவ்வொரு நோயாளருக்கும் தனித்தனியாக அட்டை சுகாதார அமைச்சினால் வழங்கப்படுகிறது. இதற்காக வெளி நோயாளர் சிகிச்சை பிரிவுக்கு வரும் நோயாளி யொருவர் தேசிய அடையாள அட்டை … Read more

இந்திய மக்களிடமிருந்து 16 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிப்பொருட்கள்

இந்திய மக்களால் நன்கொடையாக வழங்கப்படும் இரண்டு பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பாரியதொரு மனிதாபிமான உதவித்தொகுதி 2022 மே மாதம் 22ஆம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது. 9000 மெட்ரிக்தொன்  அரிசி, 50 மெட்ரிக்தொன் பால்மா  மற்றும் 25 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான மருந்து வகைகளும் ஏனைய மருத்துவப் பொருட்களும் உள்ளடங்கிய இத்தொகுதி, உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களால் இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட தலைமைத்துவத்திடம் கையளிக்கப்படவுள்ளது. 2.          2022 மே 18ஆம் திகதி மாண்புமிகு … Read more