'வினோதய சித்தம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர்…!

தெலுங்கு
திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் நடிகர்பவன் கல்யாண்.இவர் நடிகர் என்பது மட்டுமல்லாது இயக்குனர், தயரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முக திறமையுடன் விளங்குகிறார்.

இவருக்கு தெலுங்கு திரையுலகில் ஏராளமான
ரசிகர்கள்
பட்டாளம் உள்ளது. தற்போது இவர் சமுத்திரக்கனியின்
வினோதய சித்தம்
படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு

சமுத்திரகனி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் வினோதய சித்தம். அபிராமி மீடியா ஒர்க்ஸ் தயாரித்திருந்த இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, முனீஷ்காந்த், ஜெயப்ரகாஷ்,
தீபக் ஹரி
, ஸ்ரீ ரஞ்சனி, சஞ்சிதா ஷெட்டி, யுவலக்ஷ்மி போன்ற பலர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆயுர்வேத சிகிச்சை முடிந்து லத்தி படப்பிடிப்புக்கு திரும்பும் விஷால்…!

நீண்ட நாட்களுக்கு பிறகு சமுத்திரக்கனி ஒரு சிறந்த படத்தை ரசிகர்களுக்கு அளித்திருப்பதாக பலரும் இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர். இந்தபடமானது நேரடியாக ஜீ5
ஓடிடி
இயங்குதளத்தில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்றது.

சில நாட்களாக சமுத்திரக்கனியின் படங்கள் கிரிஞ்சாக இருப்பதாக சலித்துக்கொண்ட ரசிகர்கள் பலரும் இந்த படத்தை பார்த்து ரசித்தனர். இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

தற்போது இந்த படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான
பவன் கல்யாண்
நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது, மேலும் இதில்
தேஜ்
முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வினோதய சித்தம் படம் பவன் கல்யாணுக்கு மிகவும் பிடித்து போய்விட்டதால் அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பவன் கல்யாண் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான
‘வக்கீல் சாப்
‘ படம்வரவேற்பை பெற்றது, அதனையடுத்து இந்த ஆண்டு வெளியான
‘பீம்லா நாயக்
‘ படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து பவன் கல்யாண் ‘வினோதய சித்தம்’ படத்தின் தெலுங்கு பட ரீமேக்கில் நடிக்கிறார். விரைவில் இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.