சீனியில் எறும்பு மொய்க்குதா? ஃப்ரிட்ஜில் மாவு பொங்குதா? சிம்பிள் ஹேக்ஸ் தெரிஞ்சுக்கோங்க

Kitchen Hacks in tamil: நமது அன்றாட உணவுகளை தயார் செய்யும் இடமான சமையலறையை சுத்தமாக வைத்திருக்க நாம் பல கிட்சன் ஹேக்ஸ்களை பயன்படுத்தி வருவோம். ஆனால் சில குறிப்புகள் சமையல் வேலைகளை மிகவும் எளிதாக்கும். அப்படியான சில குறிப்புகள் அல்லது கிட்சன் ஹேக்ஸ்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

சர்க்கரை டப்பாவில் எறும்பு மொய்க்காமல் இருக்க

நமது சமையலறையில் ‘சர்க்கரை’ முக்கிய இடத்தை பிடிக்கும் பொருள். ஆனால், இவை சேர்த்து வைக்கப்பட்டுக்கு உள்ள டப்பாவில் எறும்புகள் அடிக்கடி மொய்ப்பதுண்டு. அவை வராமல் இருக்க, அந்த டப்பாவில் மூன்று அல்லது நான்கு ஏலக்காய்களை போட்டு வைத்தால் எறும்புகள் அண்டாது.

தேங்காய் எண்ணெயில் வாடை வராமல் இருக்க

தேங்காய் எண்ணெயை கடையிலிருந்து வாங்கி வந்த பிறகு, அவற்றில் 10 மிளகு போட்டு வைத்துவிட வேண்டும். இப்படி வைத்துவிட்டால் 6 மாதங்களுக்கு பிறகும் எண்ணெய் பிரஷ்ஷாக இருக்கும். இந்த எண்ணெயை நீங்கள் தாராளமாக தலையில் தேய்த்து வரலாம்.

வெஜிடபிள் கட்டரை சுத்தம் செய்ய

நாள்பட்ட வெஜிடபிள் கட்டரை சுத்தம் செய்ய அவற்றின் மீது சோடா உப்பு தூவி, எலுமிச்சை பழ சாறு பிழிந்து வைத்துக்கொள்ளவும். பிறகு எலுமிச்சம் பழத்தோலைக் கொண்டு அவற்றின் மீது நன்றாக தேய்த்துக்கொள்ளவும். 5 நிமிடங்கள் ஊறவைத்து பின் கழுவினால் இப்போது பளபளப்பாக இருக்கும்.

பிஸ்கட் கெடாமல் இருக்க

பிஸ்கட்டை பாட்டிலில் போட்டு மூடியை டைட்டாக மூடி வைத்தாலும் அவை எளிதில் கெட்டு போய்விடுகிறது அல்லது நமத்துப் போய்கிறது. இதைத் தடுக்க அந்த பாட்டிலில் ஒரு ஸ்பூன் அரிசியை போட்டு வைத்தல் போதுமானது.

எலுமிச்சை சாறு அதிகம் கிடைக்க

எலுமிச்சை பழத்தை சாறு பிழிவதற்கு முன், அவற்றை வெந்நீரில் இட்டு சிறிது நேரம் கழித்து பிழிந்தால் வழக்கத்தைவிட நிறையச் சாறு கிடைக்கும்.

ஃப்ரிட்ஜில் மாவு பொங்காமல் இருக்க

உங்களது ஃப்ரிட்ஜில் உள்ள இட்லி மாவு பொங்கி வழியும் பிரச்சனை இருந்தால், அந்த மாவின் மேல் வாழை இலையை சிறுசிறு துண்டுகளாக வெட்டி கவிழ்த்து போட்டு வைக்கவும். இது மாவு பொங்கி வருவதை தடுக்க உதவும்.

கருணைக் கிழங்கில் உள்ள அரிப்பு நீங்க

கருணைக் கிழங்கை வேக வைக்கும்போதே அதில் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள், சிறிய நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து வைக்கவும். இப்படி வேக வைக்கும்போது அதில் இருக்கும் அரிப்பு நீங்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.