ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த தயார்: தேர்தல் ஆணையம் உறுதி!

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில்
ஒரே நாடு ஒரே தேர்தல்
நடத்த தயாராக இருக்கிறோம் என தலைமை தேர்தல் ஆணையர்
சுஷீல் சந்திரா
கூறியுள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நல்ல பரிந்துரை. இதை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் அரசியமைப்பில் மாற்றம் கொண்டு வரவேண்டும் அது குறித்து நாடாளுமன்றத்தில் முடிவெடுக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம்
ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்த தயாராக உள்ளது என தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா ஏஎன்ஐ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு சட்டத்தின்படி அனைத்து தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்கள் மூன்றுமே ஒரே நேரத்தில் நடைபெற்றன. ஆனால் சில சமயங்களில் சட்டமன்றம் கலைக்கப்பட்டது, சில சமயங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதனால் அதன் கால அட்டவணை சீர்குலைந்தது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரு நல்ல ஆலோசனைதான் ஆனால் இதற்கு அரசியலமைப்பில் மாற்றம் தேவை.

நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது சில மாநிலங்களில் சட்டமன்ற பதவிக்காலம் முடிவடையாமல் இருக்கும். அந்த ஆட்சியை கலைப்பது குறித்தோ அல்லது அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை பதவிக்காலத்தை நீட்டிப்பது குறித்தோ யோசிக்கலாம். ஆனால் நாடாளுமன்றம் தான் இது குறித்து முடிவெடுக்க முடியும்.

இல்லையென்றால் நாடாளுமன்றத் தேர்தலோடு பாதி மாநிலங்களுக்கான தேர்தலை நடத்தலாம். மீதமுள்ள மாநிலங்களுக்கான தேர்தலை அடுத்ததாக நடத்தலாம். ஆனால் தேர்தல் ஆணையம் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயாராக உள்ளது, தகுதியாகவும் உள்ளது என்று சுஷில் சந்திரா கூறியுள்ளார்.

ஐந்து மாநில தேர்தல்கள் குறித்து பேசிய அவர் பேரணிகள் மற்றும் பாதயாத்திரைகளை தடை செய்தது கடினமான முடிவு என்று கூறினார்.

Election Results 2022 Live Updates: தேர்தல் முடிவுகள்; செம டஃப் கொடுக்கும் பாஜக – ஆட்டம் காணும் காங்கிரஸ்!

தேர்தல் பணிகளை செப்டம்பர், அக்டோபர் மாதங்களிலேயே தொடங்கி விட்டோம். அப்போது மூன்றாவது அலை வரும் என யாருக்கும் தெரியாது. டிசம்பர் மாதம் ஒமிக்ரான் பரவத் தொடங்கியது. தேர்தல் ஆணையம் சார்பாக ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளருடனும் அத்துடன் மாநில தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறைச் செயலாளருடனும் பேசினோம். அப்போது கொரோனா பரவி வந்தது.

சில மாநிலங்களில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. எனவே பிரச்சாரத்தின் தொடக்கத்தில் பேரணி, பாத யாத்திரைக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

வாக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டும், வாக்காளர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் கருத்தாக இருக்கிறது என்று சுஷீல் சந்திரா கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.