கோலிவுட் ஸ்பைடர்: ரிலீஸுக்குக் காத்திருக்கும் த்ரிஷா படங்கள்; `வலிமை'யிலிருந்து யுவன் விலகியது ஏன்?

* கன்னடத்தில் ‘கப்ஸா’ என்ற படத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா. இது 1970களில் நடந்த கொடூரமான கேங்க்ஸ்டர் கதையாம். அதில் அரசி மதுமதியாக மெயின் ரோலில் பளபளக்கவிருக்கிறார். இப்படத்தில் ஸ்ரேயாவுடன் கிச்சா சுதீப், உபேந்திரா நடிக்கிறார்கள். ஏழு மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் பூஜை பெங்களூருவில் தொடங்கி, அங்கேயே தொடர்ந்து ஷூட்டிங் நடக்கவிருக்கிறது. ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்திற்குப் பிறகு இனி பெரிய புராஜெக்ட்களில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் ஸ்ரேயா.

ஸ்ரேயா சரண்

* விஷாலுக்கு இந்த வருடம் கல்யாணம் செய்து வைத்துவிட தீவிரமான முயற்சிகள் நடக்கின்றன. இதை முன்னெடுத்து செய்கிற வேலையை அவரது தங்கையே இப்போது கையில் எடுத்திருக்கிறார். யார் சொல்லியும் கேட்காத விஷால் தங்கை சொல்லுக்குக் கட்டுப்படுவார் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். நடிகர் சங்கக் கட்டடம் கட்டிமுடித்தப் பின்புதான் திருமணம் என்ற சபதத்தை அவர் கைவிடுவார் எனப் பேசிக் கொள்கிறார்கள். இரண்டு காதல்கள் முறிந்துவிட்டதால் இனி அப்பா, அம்மா, தங்கை பார்த்து வைத்திருக்கிற பெண்ணைதான் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார் என்ற பேச்சு அடிபடுகிறது.

ஆர்யா, விஷால்

* முன்பெல்லாம் விஷால், ஜெயம் ரவி, ஜீவா, ஆர்யா என நான்கு நண்பர்களும் கூடுவார்கள். எப்போது ஷூட்டிங் இல்லையென்றாலும் அவர்கள் எல்லோரும் யாராவது ஒருத்தர் வீட்டில் சந்தித்து மகிழ்வார்கள். ஆனால் இந்த நடிகர் சங்கத் தேர்தல் வந்து போனதிலிருந்து இந்த ஆட்டம் பாட்டம் ஜாலி எல்லாம் நின்றுவிட்டது. வெளியே எங்காவது சந்திக்கும் போது சின்னதாக ஒரு ஹாய், ஹலோவோடு கடந்து போய்விடுகின்றனர். இதில் விதிவிலக்கு ஆர்யாவும், விஷாலும் மட்டும்தான். இருவரும் பக்கத்து பக்கத்து தெரு என்பதால் இவர்கள் சந்திப்பு மட்டும் அடிக்கடி நடக்கிறது.

* பிரகாஷ்ராஜ் கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பை விட்டுவிட்டு அரசியல் பக்கம் இறங்கிவிடுவார் என்கிறார்கள். இப்போது படவாய்ப்புகள் பலவற்றைத் தவிர்த்து வருகிறார். மிகவும் முக்கியமான படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். மற்றொரு பக்கம், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுடன் நெருங்கிய நண்பராகிவிட்டார். அவரது கொள்கை முடிவுகளில் பிரகாஷ்ராஜின் ஆலோசனைகளையும் முதல்வர் கேட்க ஆரம்பித்திருக்கிறார். பிரகாஷ்ராஜின் அரசியல் ஆர்வம் அவரை முழுநேர அரசியல்வாதி ஆக்கிவிடும் என்கிறார்கள்.

பிரகாஷ்ராஜ்

* தென்னிந்திய நடிகர் சங்க பிரச்னை இன்னும் தீர்ந்தபாடில்லை. வருடங்கள் ஆனாலும் பிரச்னை இழுத்துக் கொண்டே போகிறது. கடந்த 2019ல் நடந்த சங்கத்தேர்தல் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவுக்கு எதிராக நடிகர் ஏழுமலை என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

லட்சுமி மேனன்

* லட்சுமி மேனனை எல்லோரும் மறந்துவிட்டார்கள். பிரபுதேவாவுடன் அவர் நடித்து முடித்திருக்கும் ‘யங்மங்சங்’ எப்போது ரிலீஸ் என்பது கோடம்பாக்கத்துக்கே வெளிச்சம். இந்நிலையில் லட்சுமி மேனன். மறுபடியும் தமிழில் ஒரு ரவுண்டு வரத் துடிக்கிறார். அவருடைய சமீபத்திய ஸ்டில்களை முன்பு ஜோடி சேர்ந்த ஹீரோக்கள் மற்றும் பழைய தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைத்து வருகிறார். இதனிடையே மலையாளத்திலும் ஆர்வம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.

* ‘வலிமை’யில் யுவன் பின்னணி இசை அமைக்காததன் பின்னணி பற்றி கோடம்பாக்கத்தில் இப்போது பேச்சு கேட்கிறது. அந்தப் படத்தில் மொத்தமே இரண்டு பாடல்கள் மற்றும் தீம் மியூசிக்குகள்தான். ஆனால் யுவன் சம்பளம் கேட்டதோ பேக்கேஜ் கணக்கில்தான். அதாவது படத்தில் வழக்கம் போல ஆறு பாடல்களுக்கான பேமென்ட்டுக்கான சம்பளமாம். இதில் கடுப்பான தயாரிப்பாளர் ‘அதெப்படி… ரெண்டு பாடல்தானே… அதுக்கான பேமென்ட் என்னவோ அதை மட்டும் குடுக்கறேன்’ எனக் கறார் காட்டியிருக்கிறார். அதை யுவனும் மறுக்கவே அதனால்தான் ஜிப்ரான் பின்னணி இசைக்காகப் படத்திற்குள் வந்தாராம்.

த்ரிஷா

* ‘கர்ஜனை’, ‘ராங்கி’, ‘சதுரங்க வேட்டை 2’ என த்ரிஷா நடித்து முடித்த படங்கள் எதுவும் ரிலீஸாகாமல் சில ஆண்டுகளாகவே முடங்கிக் கிடப்பதால், அப்செட்டில் இருக்கிறாராம் த்ரிஷா. புதிதாகக் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடமும் ‘பொன்னியின் செல்வன்’ வெளியான பிறகு பேசிக்கொள்ளலாம் எனப் பதில் வருகிறதாம். இன்னொரு விஷயம், தாங்கள் நடித்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாதவாறு தடைகள் வந்தால், அதில் நடித்த ஹீரோக்கள் தலையிட்டு படத்தை ரிலீஸ் பண்ண முயல்வது போல், ஹீரோயின்களும் தங்களின் படங்களை ரிலீஸ் செய்ய முயல வேண்டும் என்ற குரல்களும் இப்போது ஒலிக்கின்றன. காரணம், ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் கதாநாயகிகளுக்கு வழக்கமான சம்பளத்தைவிட பெரிய சம்பளம் பேசப்படுகிறது. இதனாலேயே இப்படி ஒரு பேச்சு கோடம்பாக்கத்தில் கேட்கிறது.

* ‘அஜித் 61’ படத்தின் டைட்டில் ‘வல்லமை’ என ஒரு பக்கம் டிரெண்டாகி கொண்டிருக்கிறது. இந்த நிலையில், படத்தின் ஷூட்டிங் இந்த வாரம் ஹைதராபாத்தில் துவங்குகிறது. ஆனால், அஜித்தின் போர்ஷன் மே மாதத்தில் இருந்துதான் ஆரம்பமாகிறதாம். அதுவரை அவர் இல்லாத போர்ஷன்கள் படமாக்கப்படும் என்கிறார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் உடம்பை ஸ்லிம்மாக்கி, செம ஃபிட்டாக களத்தில் குதிப்பார் அஜித் என்கிறார்கள்.

அஜித்

* நடிகர்கள் மோகனும், அர்ஜூனும் சிறந்த நண்பர்கள். அவர்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இருவரும் தங்கள் குடும்பத்தினரோடு ஸ்டார் ஹோட்டலில் ஒன்றுகூடுகின்றனர். அங்கிருந்து வெளியே வரும்போது மொத்த குடும்பமே வருவதால் அவர்களை ஆர்வமாய் பார்க்கவும், ஆட்டோகிராஃப் வாங்கவும் பெரும் கூட்டம் கூடி விடுகிறது. அந்த அவசரத்திலும் மோகன் தன் குடும்பத்தினரை செல்ஃபியிலிருந்து லாகவமாகத் தவிர்த்துவிடுகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.