Munnar: ஹனிமூன் ஸ்பாட் மூணாரில் மிஸ் பண்ணக்கூடாத இடங்கள்|Visual Story

`தென்னிந்தியாவின் காஷ்மீர்’ என்று அழைக்கப்படக்கூடிய மூணாரில் மிஸ் பண்ணாமல் பார்க்கவேண்டிய முக்கியமான இடங்கள் பற்றிய Photo Story. மூணாருக்கு போடி வழியாகச் செல்கிறீர்கள் எனில் இந்த இடத்தை மிஸ் பண்ணாம பாருங்க. காற்றாலை, தேனி மாவட்டத்தின் ரம்மியமானக் காட்சி, மேற்குத்தொடர்ச்சி மலையின் அழகு என ஏராளமான இயற்கை அழகை இங்கு காணலாம். கொளுக்குமலை: போடிக்கும் கேரளாவின் இடுக்கிக்கும் இடையில் அமைந்துள்ளது இந்த கொளுக்குமலை. இந்த இடத்திலிருந்து காலை சூரிய உதயத்தைக் காண்பது ரம்மியமான உணர்வைத் தரும். ஜிப் … Read more

வரலாற்றில் முதன்முறை: மே மாதத்தில் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு!

காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி குறுவை சாகுப்படிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் முன்னதாகவே திறந்துவிட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தற்போது காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால், மேட்டூர் அணைக்கு அதிக நீர்வரத்து காணப்படுகிறது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு 115.35 கன அடியாகவும், நீர் இருப்பு 86.25 டி.எம்.சி அடியாகவும் உள்ளது. மேட்டூர் அணை அதிக நீர்வரத்து தொடர்வதால் … Read more

டாடாவுக்கு ஏன் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடமில்லை?

இந்திய தொழில் அதிபர் ரத்தன் டாடா பலராலும் விரும்பப்படும் நபர்களில் ஒருவர். வசதி படைத்த நபர்களைச் சாட வேண்டும் என்றால் `இவரு பெரிய டாடா , பிர்லா’ எனக் கூறுவது வழக்கம். அப்படி பட்டிதொட்டி எங்கும் நிறைந்து கிடக்கும் டாடாவின் புகழ், அவரது தொலைநோக்கு வணிகப் பார்வையாலும், அவர் தொழிலதிபர் என்பதாலும் மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த மனிதநேயவாதி என்கின்றன பத்திரிகைகள். அப்படி என்னதான் செய்துவிட்டார் டாடா? 84 வயதாகும் ரத்தன் டாடா எந்தவொரு புகழ்போதைக்கும் அடிமையானவர் … Read more

“அமெரிக்காவின் அழுத்தத்தை மீறியும், மக்களுக்காகச் செய்திருக்கிறது..!" – இந்தியாவை பாராட்டிய இம்ரான்

மத்திய அரசு மே 21-ம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை முறையே லிட்டருக்கு ரூ.8, ரூ.6 எனக் குறைத்தது. இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பதிவில், “(கலால் வரி குறைப்பு) அரசுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை வருவாய் தாக்கத்தை ஏற்படுத்தும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இதைப் பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், “(ஆஸ்திரேலியா, … Read more

குரூப் 2 தேர்வு: தேர்வு அறைக்குள் செல்போன் வைத்திருந்த இளைஞர்… சாதுர்யமாகக் கண்டுபிடித்த ஆட்சியர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-2 பணிகளுக்கான போட்டித் தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில் 9:30 மணிக்கு தேர்வு மையத்துக்கு நுழைந்த அனைவரையும், நுழைவாயிலில் போலீஸார் சோதனைசெய்து தேர்வு அறைக்குள் அனுப்பிவைத்தனர். அந்தப் பள்ளியில் 20 பேருக்கு ஒரு அறை என ஒதுக்கீடு செய்யப்பட்டு, மொத்தம் 30 அறைகளில் மொத்தம் 600 பேர் தேர்வெழுதினர். 64 பேர் தேர்வு எழுத வரவில்லை. பலத்த போலீஸ் … Read more

கரூரில் பவர் காட்டும் அமைச்சரின் வலதுகரம் | முன்னாள், இன்னாள் சபாநாயகர்கள் மோதல் | கழுகார் அப்டேட்ஸ்

வாயடைத்துப்போன நேரு!எகிறிய நிர்வாகி… தென்காசி வடக்கு, தெற்கு மாவட்டச் செயலாளர்களை சமீபத்தில் நேரில் அழைத்து விசாரணை நடத்தியிருக்கிறது அறிவாலயம். வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லத்துரையிடம், “ஒரே சமூகத்தைச் சேர்ந்தவங்களுக்கு மட்டுமே கட்சிப் பதவியை வழங்கியிருக்கீங்கன்னு நிறைய புகார் வருது… உங்ககிட்ட விளக்கம் எதிர்பார்க்கிறோம்…” என்று முதன்மைச் செயலாளர் நேரு அதட்டலாகக் கேட்டிருக்கிறார். “அந்தச் சமூகத்துக்கு இதுவரைக்கும் நீங்க என்ன பிரதிநிதித்துவம் கொடுத்திருக்கீங்க… நாம ஆட்சிக்குவந்த பிறகு அந்தச் சமூகம் அடைந்த பலன்தான் என்ன…” என்று எதிர்க் கேள்வி … Read more

தொழில் தொடங்கிய பிறகு சுற்றுச்சூழல் அனுமதி; சூழலியல் பாதுகாப்புக்கு ஓர் ஆபத்தான முன்மாதிரி!

ஏற்கெனவே ஒரு தொழில் தொடங்கப்பட்ட பிறகு, ‘விதி விலக்கான சூழ்நிலைகளில்’ மட்டும் அதற்கு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்க, உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த உத்தரவு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஆபத்தான முன்மாதிரியாக ஆகிவிடும் என சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டில், சினோகெம் ஆர்கானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக, தஸ்தாக் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஹரியானாவில் உள்ள 15 ரசாயன அலகுகள், ஃபார்மால்டிஹைடு … Read more

”உண்மையான துறவிகளாக ஆதீனங்கள் வாழவில்லை”- பழ. நெடுமாறன்

தஞ்சாவூர் விளார் கிராமத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வந்திருந்தார். அவரைச் சந்தித்து இலங்கைப் பிரச்னை, பட்டணப் பிரவேசம், தி.மு.க அரசின் ஓராண்டு ஆட்சி உள்ளிட்ட பல கேள்விகளை முன் வைத்தோம். அனைத்திற்கும் வெளிப்படையாக பதில் அளித்தார். முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பழ.நெடுமாறன் 1. இலங்கையில் இப்போது நிலவும் பிரச்னைகள் உங்களுக்கு எதை உணர்த்துகின்றன? இனவெறியையும்,மதவெறியையும் அப்பாவி மக்களிடம் தூண்டி விட்டு அரசியல் நடத்துபவர்களின் இறுதி … Read more

யூரோ டூர் 37: நோர்டிக் நாடுகள் – நார்வே என்னும் செல்வச் சமுத்திரம்; ஸ்வீடனின் பவர்ஃபுல் பாஸ்போர்ட்!

ஐரோப்பா பற்றிப் பேசும்போது தவிர்க்க முடியாத ஒன்று ஸ்காண்டிநேவிய நாடுகள். டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுடன் Faroe தீவுகள், கிரீன்லாந்து மற்றும் Åland ஆகிய தீவுகளை உள்ளடக்கி, 27 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட நோர்டிக் பிராந்தியமானது USD 1.5 டிரில்லியன் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், ஐரோப்பாவில் 5வது பெரிய பொருளாதாரமாகவும், உலகின் 10வது பெரிய பொருளாதாரமாகவும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்காண்டிநேவிய நாடுகளுக்கும் நோர்டிக் நாடுகளுக்கும் என்ன வித்தியாசம் என்றால், ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன், … Read more

நெஞ்சுக்கு நீதி: திரையரங்கில் குவியும் அமைச்சர்கள் முதல் திமுக தொண்டர்கள் வரை… என்ன நடக்கிறது?!

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற திரைப்படத்தைத் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க நிர்வாகிகள் கொண்டாடி வருகிறார்கள். 2019-ல் இந்தியில் வெளியான ஆர்டிகிள் 15 என்ற படத்தின் அதிகாரபூர்வமான மறு ஆக்கம்தான் இந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம். 2008-ம் ஆண்டில் தயாரிப்பாளராகத் தனது சினிமாப் பயணத்தைத் தொடங்கிய உதயநிதி 2012-ம் ஆண்டில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் நாயகனாகவும் மாறினார், … Read more