ஓய்வூதியம் வேண்டாம்… மக்கள் நலப் பணிகளுக்கு செலவு செய்யுங்கள்- பர்காஷ் சிங் பாதல்

சிரோமணி அகாலி தளத்தின் மூத்த தலைவர் பர்காஷ் சிங் பாதல் (94). பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் எம்எல்ஏவான இவர் 11 முறை பதவி வகுத்துள்ளார்.
1957-ம் ஆண்டில் முதல் முறையாக மாலவுட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். பிறகு, கிதர்பாஹா தொகுதியில் 1969ம் ஆண்டு, 1972, 1977, 1980 மற்றும் 1985 ஆகிய ஆண்டுகளில் வெற்றிப் பெற்று எம்எல்ஏ பதவி வகித்தார்.

அதன்பிறகு, லாம்பி தொகுதிக்கு மாறிய அவர் 1997-ம் ஆண்டு முதல், 2002, 2007, 2012 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து ஐந்து முறை வெற்றிப்பெற்றார். பிறகு ஓய்வுப்பெற்றார்.

இந்நிலையில், சமீபத்தில் நடைறெ்ற பஞ்சாப் சட்டசபை தேர்தலில் அனைத்து முன்னணி கட்சிகளையும் தோற்கடித்து ஆம் ஆத்மி வெற்றி வாகையை சூடியது.

இதில், பர்காஷ் பாதலின் சொந்த தொகுதியான லாம்பியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட குர்மீத் சிங் குதியனிடம் தோற்கடிக்கப்பட்டார்.

இந்நிலையில், முன்னாள் எம்எல்ஏ என்ற முறையில் வரும் ஓய்வூதியத்தை ஏற்கப் போவதில்லை என்றும் அதை மாநில மக்களின் நலனுக்காகப் பயன்படுத்துமாறு பஞ்சாப் அரசை பர்காஷ் பாதல் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து சிரோமணி அகாலி தளம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:-

முன்னாள் எம்எல்ஏவாக எனக்கு வரும் ஓய்வூதியம் அனைத்தையும் பஞ்சாப் மக்களின் நலனுக்காகப் பயன்படுத்துமாறு பஞ்சாப் அரசு மற்றும் சபாநாயகர் ஆகியோரிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று எழுத்துப்பூர்வமாக தனித்தனியாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. லஞ்ச ஊழலுக்கு எதிராக விரைவாக நடவடிக்கை… ஹெல்ப்லைனை தொடங்க உள்ளது பஞ்சாப் அரசு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.