ரஷ்யா செஞ்சது தப்பு.. எதிர்த்து வாக்களித்த இந்திய நீதிபதி.. சர்வதேச கோர்ட்டில் பரபரப்பு!

சர்வதேச நீதிமன்றத்தில்
உக்ரைன் போர்
தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் குழுவில் இடம் பெற்ற இந்திய நீதிபதி, ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்துள்ளார்.

சர்வதேச நீதிமன்றத்தில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், ரஷ்யா உடனடியாக தனது போரை நிறுத்த வேண்டும் என்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. இந்த வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நீதிபதி ஜோன் டோனஹாக் தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து இந்த உத்தரவை அளித்தது. இந்த நீதிபதிகள் இந்தியரான நீதிபதி தல்வீர் பண்டாரியும் இடம் பெற்றிருந்தார். அவரும் ரஷ்யாவுக்கு எதிராக தனது கருத்தையும், வாக்கையும் செலுத்தியிருந்தார்.

1000 பேர் தஞ்சமடைந்திருந்த தியேட்டர்.. குண்டு வீசித் தகர்த்தது ரஷ்யா.. பெரும் பரபரப்பு!

உக்ரைன் அரசு இந்த போர்க்குற்ற வழக்கை சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்துள்ளது. பிப்ரவரி 24ம் தேதி முதல் உக்ரைனை தாக்கி வருகிறது ரஷ்யா. பல நாடுகள் கூறியபோதும் கூட அதை ரஷ்யா கேட்கவில்லை. தனது நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உக்ரைன் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டி இந்தப் போரை கையில் எடுத்துள்ளது ரஷ்யா.

இந்த வழக்கைத்தான் தற்போது சர்வதேச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. நீதிபதிகள் குழுவில் இந்தியரான பண்டாரியும் இடம் பெற்றுள்ளார். ரஷ்யா விவகாரத்தில் இந்தியா யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. அதேசமயம், ரஷ்யாவுக்கு எதிராகவும் இந்தியா செயல்படவில்லை. ஐ.நா. சபை தீர்மானத்தின் போதும் கூட இந்திய வாக்களிக்காமல் நடுநிலை வகித்தது. இந்த நிலையில் இந்தியரான நீதிபதி தல்வீர் பண்டாரி ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்தவர்தான் நீதிபதி தல்வீர் பண்டாரி. மேலும் பாம்பே உயர்நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றத்திலும் இவர் பணியாற்றியுள்ளார். ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் தல்வீர் பண்டாரி. இவரது குடும்பமே வக்கீல்கள் குடும்பம்தான். இவரது தாத்தா, தந்தை ஆகியோரும் பிரபல வக்கீல்களாக வலம் வந்தவர்கள். கடந்த 2012ம் ஆண்டு முதல் சர்வதசே கோர்ட்டில் நீதிபதியாக இருந்து வருகிறார் தல்வீர் பண்டாரி.

“No war”.. ரஷ்யப் பெண்ணை 14 மணி நேரம் துருவித் துருவி விசாரித்த அதிகாரிகள்!

இந்த வழக்கு விசாரணையின்போது ரஷ்யா நேரில் ஆஜராகவில்லை. மாறாக எழுத்துப்பூர்வ பதிலை தாக்கல் செய்தது. அதில் இந்த வழக்கை விசாரிக்க சர்வதேச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. எங்களது சுய பாதுகாப்புக்காக இந்தப் போரை தொடங்கியுள்ளோம். எங்களது நாட்டு மக்களின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம் என்று கூறியிருந்தது.

சர்வதேச கோர்ட்டின் உத்தரவை ரஷ்யா மதிக்க வேண்டும். உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று உக்ரைன் கோரியுள்ளது. ஆனால் ரஷ்யாவோ போரை நிறுத்துவதாக தெரியவில்லை. தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் உள்ளன. மறுபக்கம் உக்ரைனுடன் ரஷ்யாவின் பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து கொண்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.