பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண முதல்வர் உஸ்மான் பஸ்தார் ராஜினாமா| Dinamalar

இஸ்லாமாபாத்: இம்ரான் கான் அரசை தொடர்ந்து பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாண முதல்வர் உஸ்மான் பஸ்தாரை நீக்க கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகியள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தான், நிதி நெருக்கடி, விலை வாசி உயர்வு போன்றவற்றால், தள்ளாடுகிறது. இதற்கு பிரதமர் இம்ரான்கானின் செயல்பாடுகளே காரணம் என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.இதையடுத்து இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கட்சித் தலைவர் ஷப்பாஸ் ஷெ ரீப் பார்லிமென்டில் இன்று தாக்கல் செய்தார்.

இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் இம்ரானின் கட்சி முதல்வர் உஸ்மான் பஸ்தார் மீது ஊழல் புகாரை அடுத்து, அவரை நீக்க கோரும் தீர்மானம் பஞ்சாப் மாகாண சட்டசபையில் எதிர்கட்சிகள் கொண்டு வந்தனர். இதற்கு 126 உறுப்பினர்கள் ஆதரவு
அளித்ததாகவும், இதையடுத்து முதல்வர் உஸ்மான் பஸ்தார் தனது பதவியை ராஜினாமா செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.