இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இந்திய இசைக்குயில் எம்.எஸ் சுப்புலக்ஷ்மி.

1. கனத்த இதயங்களையும் கரைக்கும் வண்ணம், கனிந்துருகும் இசையின் துணை கொண்டு, குயிலினும் இனிய தன் குரல்வளத்தால் கோடானு கோடி மக்களை மகிழ்வித்து, கானம் பாடி காற்றில் கரைந்த கானக்குயில் 'இசையரசி' எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் 19வது நினைவு தினம் இன்று… 2. மதுரை சண்முகவடிவு சுப்புலக்ஷ்மி என்ற இயற்பெயரைக் கொண்ட திருமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, 1916ம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று, சுப்ரமணியம் அய்யர் மற்றும் சண்முக வடிவு அம்மாள் தம்பதியரின் மகளாக, சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் பிறந்தார். … Read more

பூரண குணமடைந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்

நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் பாதிப்பால் அவதிப்படுகிறார். சமீபத்தில் அவருக்கு காய்ச்சல் உடன் இருமல் மற்றும் சளி தொந்தரவு ஏற்பட்டதால் சென்னை, மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அதன்பின் தீவிர கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்திற்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையே அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் பரவியது. இதை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மறுத்து வந்தார். … Read more

கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி!

நடிகர் கவின் இளன் இயக்கத்தில் 'ஸ்டார்' படத்திலும், சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்திலும் நடித்து வருகிறார்.மேலும் இயக்குனர் நெல்சன் முதல் முறையாக தயாரிக்கும் படத்தில் கவின் ஹீரோவாக நடிக்கின்றார். இப்படத்தை நெல்சனின் உதவி இயக்குனர் சிவபாலன் என்பவர் இயக்குகிறார் என தகவல்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் இதில் கதாநாயகியாக பிரியங்கா மோகனும் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான படப்பிடிப்பு மைசூரில் துவங்கியுள்ளதாம். … Read more

“மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு

ஜி.எஸ் சினிமா இண்டர்நேஷனல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள படம் “மதிமாறன்”. ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், 'ஆடுகளம்' நரேன், பாவா செல்லதுரை, பிரவீன் குமார், சுதர்சன் கோவிந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்த நிலையில், வெளியீட்டுக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மதிமாறன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் டிரைலர், … Read more

VIT, University Chancellor Viswanathan Perumitham is proud to say Tamil with pride. | தமிழர் என்று கர்வத்துடன் சொல்ல வேண்டும் ; பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் பேச்சு

பெங்களூரு: ”கிட்டத்தட்ட, 2,000 ஆண்டுகளை கடந்தும், தமிழ் எழுத்தும், பேச்சும் மாறாமல் இருப்பதால், தமிழர் என்று நாம் கர்வத்துடன் சொல்ல வேண்டும்,” என, வேலுார் வி.ஐ.டி., பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் கூறினார். கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில், இரண்டாம் ஆண்டு பெங்களூரு தமிழ் புத்தக கண்காட்சி, கடந்த 1ம் தேதி துவங்கியது. ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகள், விஞ்ஞானிகள், தமிழ் ஆர்வலர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். 10 நாட்கள் நடந்த புத்தக திருவிழா நேற்றுடன் நிறைவு … Read more

சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்?

பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் படம் 'சலார்'. பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரவி பசூர் இசையமைக்கிறார். சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில் இப்படத்தில் அதிகமாக ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் இதற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் அளிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் … Read more

Crowd at Sabarimala: Darshan increases by one hour | சபரிமலையில் அலைமோதும் கூட்டம்: தரிசனம் ஒரு மணி நேரம் அதிகரிப்பு

சபரிமலை: சபரிமலையில் தரிசன முன்பதிவில் குளறுபடி தொடர்கிறது. பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ள நிலையில், தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் மண்டல காலம் நடந்து வரும் நிலையில், பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு வாயிலாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். நேர அளவின்படி முன்பதிவு வழங்கியதாக தேவசம்போர்டு கூறுகிறது. ஆனால், மூன்று நாட்களாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நிலக்கல்லுக்கு, 10 கி.மீ., முன்பே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அங்கு இரண்டு மணி நேரம் காத்திருந்த பின் பம்பை வருகின்றனர். பம்பையிலும் நான்கு … Read more

மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா?

சென்னை மழை வெள்ளம் முடிவுக்கு வந்தாலும் 'பருத்திவீரன்' பட விவகாரம் முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டே போகிறது. அமீர் அளித்த சில பேட்டிகள், தயாரிப்பாளர் ஞானவேல் அளித்த பேட்டி, தயாரிப்பாளர் சங்க முன்னாள் செயலாளர் சிவசக்தி பாண்டியன் அளித்த போட்டி, அமீர் தந்த அறிக்கை என தற்போது வரையிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அமீர் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடித்து வரும் நிலையில் சூர்யா குடும்பத்தினர் கடும் வெறுப்பில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவர்கள் தரப்பிலிருந்து இனி அமீர் பற்றி … Read more