மரியுபோல் நகரில் ரஷியா நடத்திய இனப்படுகொலையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்- ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடங்கிய போரால் அந்நாடு உருக்குலைந்து போயிருக்கிறது. தலைநகர் கிவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட அனைத்து நகரங்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் முற்றிலும்

இதற்கிடையே தலைநகர் கிவ் மற்றும் செர்னிஹிவ் நகரங்களை சுற்றி வளைத்திருந்த படைகள் குறைக்கப்படும் என்று ரஷியா அறிவித்தது. இதையடுத்து கிவ் புறநகர் பகுதிகளில் இருந்து ரஷிய படைகள் வெளியேறின.

ரஷிய படைகள் வெளியேறிய பின் தெருக்களில் பொதுமக்கள் உடல்கள் சிதறி கிடந்தன. கிவ் புறநகரான புச்சாவில் 300 மக்கள் ரஷிய படையால் கொல்லப்பட்டனர் என்று உக்ரைன் தெரிவித்தது.

புச்சாவில் ரஷியா இனப்படுகொலையில் ஈடுபட்டது என்று உக்ரைன் குற்றம் சாட்டியது. இதற்காக ரஷியாவுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் இனப்படுகொலை குற்றச்சாட்டை ரஷியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்தநிலையில் புச்சாவில் நடந்தது போல் மரியுபோல் நகரிலும் ரஷியா இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளது என்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

துறைமுக நகரமான மரியுபோலில் ரஷியா படைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி உள்ளன. அங்குதான் அதிகமாக பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட அழிந்து போன இடமாக மரியுபோல் மாறி இருக்கிறது.

இந்தநிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும் போது, “ரஷிய படை ஆக்கிரமித்துள்ள மரியு-போல் நகருக்கு மனிதாபிமான உதவிகளை தடுத்து வருகிறார்கள். ஏனென்றால் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களை மறைக்க ரஷியா முயற்சிக்கிறது.

மனிதாபிமான உதவிகளுடன் நாம் மரியுபோலுக்குள் நுழைய முடியாததற்கு காரணம் அவர்கள் (ரஷியா) பயப்படுவதால்தான். அங்கு என்ன நடக்கிறது என்பதை உலகம் பார்க்கும்.

மரியுபோல் நகரமாக மாறி உள்ளது என்று நினைக்-கிறேன். நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு கொல்லப்-பட்டுள்ளனர். ஆயிரக்கணக்-கானோர் காயம் அடைந்துள்-ளனர்.

அவர்கள் (ரஷியா) மக்களை குடும்பம் குடும்பமாக புதைத்தனர். நேற்று நாங்கள் கொல்லப்பட்ட ஒரு குடும்பத்தை கண்டோம். தந்தை, தாய், இரண்டு குழந்தைகள். சிறிய, சிறிய குழந்தைகள். இதனால்தான் அவர்களை ‘நாஜிக்சன்’ என்று சொன்னேன். மக்கள் கொல்லப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் மறைக்கும் முயற்சியில் ரஷியா வெற்றியடையாது. அதை மறைக்க முடியாது. ஏற்கனவே புச்சா நகரத்தில் குற்றங்கள் நடந்ததற்கான ஆதாரங்களை ரஷியா மறைக்க முயற்சித்துள்ளது” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.