Vijay: ப்பா… எவ்வளவு எளிமை… அதை கவனிச்சீங்களா?

மாஸ் நடிகரான விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதுமே ரசிகர்கள் உள்ளனர்.
விஜய்
ஏதாவது படத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானதுமே அவரது படத்திற்கான பிஸ்னஸும் சூடுபிடிக்க ஆரம்பித்து விடும்.

படப்பிடிப்பு முடிவதற்குள்ளேயே பிஸ்னஸ் நடந்து முடிந்து விடும். விஜய்யின் சம்பளமும் அப்படிதான். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக உள்ளார். ஆனாலும் பெரிதாக எந்த பந்தாவும் இல்லாமல் எளிமையாக இருந்து வருகிறார் விஜய்.

Gossip: அடக்கடவுளே… திருமணத்திற்கு முன்பே அப்படி.. இயக்குநருடன் மாதக் கணக்கில் ஒரே அறையில் தங்கியிருந்த நடிகை!

இந்நிலையில் நேற்று வெளியான விஜய்யின் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு எளிமையா என பிரமித்து வருகின்றனர். அதாவது நேற்று காலை
தளபதி 66
படத்தின் பூஜையில் பங்கேற்றார் விஜய். இந்த போட்டோக்கள் இணையத்தில் பெரும் வைரலாகி தெறிக்கவிட்டது.

Aishwarya rajinikanth: ஐஸ்வர்யா ‘அவருடன்’ நெருக்கமாக இருப்பது ரஜினிக்கே பிடிக்கவில்லையாம்!

அதனை தொடர்ந்து தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் மகள் திருமண வரவேற்பில் பங்கேற்றார் விஜய். இந்த போட்டோக்களும் பெரும் வைரலானது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் நடிகர் விஜய் ஒரே பேண்ட் மற்றும் ஒரே சட்டை அணிந்துள்ளார் விஜய். சாண்டல் நிற பேண்ட் நீல நிற சட்டை அணிந்து பங்கேற்றார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் எவ்வளவு எளிமை என வாயை பிளந்துள்ளனர். ஏற்கனவே வாக்களிக்க சைக்கிளில் சென்றார் நடிகர் விஜய். பல சொகுசு கார்கள் உள்ள போதும் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தையே விஜய்யின் எளிமை என கொண்டாடி தீர்த்தனர் ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.