ஷபாஸ் ஷெரீப்பின் பூர்வீகம் காஷ்மீர்

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் தம்பி ‌ஷபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட உள்ளார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பி.எம்.எல்.-என்) கட்சித் தலைவராக ‌ஷபாஸ் ஷெரீப்புக்கு தற்போது 70 வயதாகிறது. இவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரர் ஆவார்.

லாகூரில் பஞ்சாபி மொழி பேசும் காஷ்மீர் குடும்பத்தில் 1951-ம் ஆண்டு ‌ஷபாஸ் ஷெரீப் பிறந்தார். அவரது தந்தை முகமது ஷெரீப் தொழில் அதிபர் ஆவார். இவர் காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பகுதியை சேர்ந்தவர். 20-ம் நுற்றாண்டின் தொடக்கத்தில் தொழில் வி‌ஷயமாக இவர் புலம் பெயர்ந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள ஜதிஉம்ரா கிராமத்தில் குடியேறினார் ‌ஷபாஸ் ஷெரீப்பின் தாயார் காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியை சேர்ந்தவர்.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு 1964-ம் ஆண்டு இவர்களின் குடும்பம் அமிர்தசரசில் இருந்து பாகிஸ்தான் லாகூருக்கு இடம் பெயர்ந்தது. ‌ஷபாஸ் ஷெரீப் தனது தந்தையுடன் வாகூர் சென்றார்.

கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந் தேதி தனது 49-வது வயதில் ‌ஷபாஸ் ஷெரீப் அந்த சரவில் உள்ள தனது சொந்த கிராமத்துக்கு கடைசியாக சென்றார். லாகூருக்கு சென்ற பிறகு அவர்கள் ‌ஷபாஸ் ஷெரீப் தனது சொந்தகிராம மக்களுடன் தொடர்பில் இருந்தார்.

‌ஷபாஸ் ஷெரீப் தனது சகோதரர் நவாஸ் ஷெரீப்புடன் இணைந்து 1980-ம் ஆண்டுகளின் மத்தியில் அரசியலில் நுழைந்தார். 1988-ம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாப்மாகாண முதல்-மந்திரியாக நவாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அந்த மகாணத்தின் சட்டப்பேரவை உறுப்பினராக ‌ஷபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார்.

நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தபோது 1997-ம் ஆண்டுக்கு பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி ‌ஷபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். 1999-ம் ஆண்டு ராணுவ தளபதி பர்வீஷ் மு‌ஷரப் தலைமையிலான ராணுவ புரட்சியால் நவாஸ் ஷெரீப் அரசு கலைக்கப்பட்டாதால் ‌ஷபாஸ் ஷெரீப் தனது குடும்பத்தினருடன் சவூதி அரேபியாவில் 8 ஆண்டுகள் வசித்தார். பின்னர் 2007-ம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பினார்.

அதன் பிறகு 2008-ம் ஆண்டு 2-வது முறையாகவும், 2013-ம் ஆண்டு 3-வது முறையாகவும் பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியாக பதவி வகித்தார்.

‘பனாமா பேப்பர்’ வழக்கில் நவாஸ் ஷெரீப் நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து பி.எம்.எல்.-என் கட்சித்தலைவராக ‌ஷவாஸ் ஷெரீப் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு 2018-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவரானார்.

2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பண மோசடி மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக இம்ரான் கான் அரசால் தொடரப்பட்ட வழக்கில் ‌ஷபாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டார். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தன்மீது வழக்கு தொடரப்பட்டதாக ‌ஷபாஸ் ஷெரீப் குற்றம் சாட்டினார். இந்த வழக்கில் பல மாதங்கள் அவர் சிறையில் இருந்தார். அதன் பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்,

தற்போது இம்ரான்கான் அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து பி.எ.எம்.எல்.-என் கட்சி நிறுவனர் நவாஸ் ஷெரீப்பால் முதல் முறையாக பிரதமர் பதவிக்கு ‌ஷபாஸ் ஷெரீப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

நவாஸ் ஷெரீப்புக்கு தன் மகள் மரியம் நவாசை பிரதமராக்க வேண்டும் என்ற விருப்பம். இருந்தாலும் அவர் ஒரு ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால் ‌ஷபாஸ் ஷெரீப்பை பிரதமர் பதவிக்கு தனது கட்சி சார்பில் தேர்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டபோது கூட ‌ஷபாஸ் ஷெரீப்பை தேர்வு செய்யாமல் கட்சியின் மூத்த தலைவர் சாதிக்கான் அப்பாசியை அடுத்த பிரதமராக நவாஸ் ஷெரீப் தேர்வு செய்தார்.

ஆனால் அதே நேரத்தில் மு‌ஷரப் ராணுவ புரட்சி செய்து நவாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்த்தபோது சகோதரரை கைவிட்டு விட்டு வெளியே வந்தால் பிரதமர் பதவி தருவதாக ‌ஷபாஸ் ஷெரீப்பிடம் மு‌ஷரப் கூறினார். அதற்கு தான் மறுத்துவிட்டதாக ஒருமுறை ‌ஷபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.

‌ஷபாஸ் ஷெரீப் 5 திருமணங்கள் செய்து கொண்டவர். தற்போது அவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். விவாகரத்து செய்துவிட்டார். ‌ஷபாஸ் ஷெரீப்புக்கு 2 மகன்கள் 4 மகள்கள் உள்ளனர். மூத்த மகன் ஹம்ஸா ‌ஷபாஸ் பஞ்சா மாகாண எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். இளைய மகன் சுலைமான் ‌ஷபாஸ் குடும்ப தொழிலை கவனித்து வந்தார். பண மோசடி வழக்கில் அவர்தேடப்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார்.

‌ஷபாஸ் ஷெரீப் 3 முறை முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ள நிலையில் தற்போது முதல் முறையாக பிரதமர் பதவியை வகிக்க உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.