எக்ஸ்இ வைரஸ் பரவலை தடுக்க சுகாதார அமைச்சர் ஆலோசனை: பூஸ்டர் தடுப்பூசி பணியை விரைவுபடுத்த உத்தரவு

புதுடெல்லி: நாடு முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. ஆல்பா, டெல்டா, பீட்டா, ஒமிக்ரான் என உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது எக்ஸ்இ என்ற உருமாற்றம் அடைந்துள்ளது. முதலில் மும்பையில் இவ்வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. பின்னர், அது எக்ஸ்இ வகை அல்ல என்று உறுதிபடுத்தப்பட்டது. அதன் பிறகு, குஜராத்தில் கண்டறியப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று நோய் தொற்று நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில், நிதி ஆயோக்கின் சுகாதார பிரிவு உறுப்பினர் விகே. பால், சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா, ஐசிஎம்ஆர் பொது இயக்குனர் பல்ராமா பார்கவா, நோய் எதிர்ப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர் என்கே. அரோரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், `எக்ஸ்இ வகை கொரோனா வைரசால் எத்தனை பேர் பாதிக்கப்படுகின்றனர் என்பதை அதிகாரிகள் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். கொரோனா தொற்றுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் இருப்பு உள்ளதா என்று பரிசோதிக்க வேண்டும். பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை மேலும் துரிதப்படுத்த வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது.* புதிய இலக்குபிரதமர் மோடி தனது டிவிட்டரில், `கொரோனாவை எதிர்பது போராட 130 கோடி மக்கள் எடுத்த முடிவு புதிய இந்தியாவின் பலத்தை காட்டுகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் உலகின் மிகப் பெரிய இலவச தடுப்பூசி திட்டம், மருத்துவ உள்கட்டமைப்பு மேம்பாடு என சுகாதாரத் துறையில் இந்தியா புதிய இலக்கு படைத்துள்ளது,’ என்று கூறியுள்ளார்.19 பேர் மட்டுமே பலி* நேற்று 796 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதியானதால் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4,30,36,928 ஆக உள்ளது.* கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் தொற்றுக்கு பலியானதைத் தொடர்ந்து உயிரிழப்பு 5,21,710 ஆக அதிகரித்துள்ளது.* சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10,889 ஆக குறைந்தது.* அமெரிக்க தூதர்கள் திரும்ப அழைப்புசீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் அதி தீவிரமாக பரவி வருவதால், ஷாங்காய் நகரில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர் நாடு திரும்பும்படி அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.