கேரளா மாநிலம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் இரண்டு குட்டிகளுடன் வலம் வரும் தாய் யானை: ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியம்

மேட்டுப்பாளையம்: கேரள மாநிலம் சாலக்குடி அதிரப்பள்ளி வனப்பகுதியில் தாயுடன் இரண்டு குட்டி யானைகள் நடமாடும் காட்சி யானை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வனத்துறையினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த சில நாட்களாக ஒரே உயரத்தில், ஒன்று போல் காட்சியளிக்கும் இரு குட்டியானைகளும் தாயுடன் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதில் ஒரு குட்டி யானைக்கு மட்டும் தந்தம் சற்று நீளமாக உள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் இதே வனப்பகுதியில் தாய் யானையுடன் இந்த இரு குட்டியானைகளையும்  வனத்துறையினர் பார்த்துள்ளனர். ஆறு … Read more

வரலாறு, கொள்கை இல்லாதவர்கள் பொய்களை பரப்பி வருகின்றனர்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை: வரலாறு, கொள்கை இல்லாதவர்கள் பொய்களை பரப்பி வருகின்றனர் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் கடைபிடிக்கப்படும் திராவிட மாதத்தின் கடைசி நாளான இன்று அவர் ட்விட்டரில் தெரிவித்தார். செய்தியின் உண்மை தன்மையை அறிந்து கொண்டு சமூக வலைதளத்தில் பகிர வேண்டும் என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசிதரூரை ஆதரிக்காமல் அதிர்ச்சி கொடுத்த அதிருப்தி தலைவர்கள்

டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசிதரூரை அதிருப்தி தலைவர்கள் ஆதரிக்காமல் அதிர்ச்சி தந்துள்ளனர். காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி தெரிவித்து கட்சி செயல்பாட்டில் மாற்றம் வேண்டும் என 23 தலைவர்கள் குரல் எழுப்பினர். ஆனந்த் சர்மா, மணீஷ் திவாரி, புபிந்தர்சிங் உட்பட 23 தலைவர்கள் கையெழுத்திட்டு 2020-ல் சோனியாவுக்கு கடிதம் எழுதினார்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.72 அடியாக சரிவு

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை தணிந்ததால், ஒகேனக்கல் காவிரியில் நேற்று 9,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையும் 9,500கனஅடியாக நீடிக்கிறது. அங்கு ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அருவியில் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீடிக்கிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை 12,303 கனஅடியாகவும், மாலையில் 11,212 கனஅடியாகவும் சரிந்தது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 10,497கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 10 … Read more

சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரத்தில் ரவுடி உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி உத்தரவு

சென்னை: சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரத்தில் ரவுடி ஆகாஷ் (21) உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக போதை மாத்திரைகளை உட்கொண்டதால் ரவுடி ஆகாஷ் நேற்று உயிரிழந்தார். ரவுடி ஆகாஷ் மரணம் குறித்து ஓட்டேரி போலீசார் விசாரித்து வந்த நிலையில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

ஆம்புலன்ஸ் செல்வதற்காக பாதுகாப்பு வாகனத்தை வழிவிட சொன்ன பிரதமர் மோடி

அகமதாபாத்: மோடி தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் வாகனத்தை ஓரமாக நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்ல வழிவிடுமாறு உத்தரவிட்டார். காந்திநகர், பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு நேற்று சென்றுள்ளார். ஆமதாபாத்தில் நேற்று 36-வது தேசிய விளையாட்டு போட்டியை அவர்  துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து பாவ்நகர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 6 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 2-வது நாளான இன்று காந்திநகர் … Read more

லாரி கவிழ்ந்து 2 பேர் பலி

தாம்பரம்: ஆந்திர மாநிலத்தில் இருந்து கடப்பா கற்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி, இன்று அதிகாலை வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியே சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது. தாம்பரம் அருகே முடிச்சூர் பகுதியில் வந்தபோது, லாரியின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, அங்குள்ள சாலையோர பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது. இவ்விபத்தில் லாரிமீது அமர்ந்திருந்த ஆந்திராவை சேர்ந்த சிவா ரெட்டி, வரதராஜு ஆகிய இருவர்மீது கடப்பா கற்கள் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். … Read more

சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்த உள்ளதை ஒட்டி போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்த உள்ளதை ஒட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அக்.2 முதல் 31 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் 10 மணிவரை போக்குவரத்து மாற்றம் செய்துள்ளதாக போக்குவரத்து போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு விவகாரம்: முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கைக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்..!!

டெல்லி: நீட் தேர்வின் தாக்கம் குறித்து முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கைக்கு தடை கோரி தொடுக்கப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. முதற்கட்டமாக நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கருத்து கேட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதலமைச்சரிடம் 165 பக்க … Read more

பஸ் வசதி கோரி மாணவர்கள் மறியல்

திருப்புவனம்:  திருப்புவனம் அருகே பஸ் வசதி கேட்டு புல்வாய்க்கரை ரோட்டில் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்புவனம் அருகே தவத்தாரேந்தலில் சுமா 300 குடும்பங்கள் உள்ளன. இங்கு வழக்கமாக காலை 5 மணிக்கும், 8 மணிக்கும், மாலையில் 5 மணிக்கும், இரவு 8 மணிக்கும் வந்த பஸ்கள் கடந்த மூன்று வருடங்களாக நின்று விட்டன. தவத்தாரேந்தலில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. பத்தாம் வகுப்பு முடித்து பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க திருப்புவனம் தான் … Read more