சந்திரசேகரன் கட்டுப்பாட்டுக்கு வந்த புதிய நிறுவனம்.. மொத்தம் 10.. இனி ஆட்டம் களைகட்டும்..!

இந்தியாவின் முன்னணி மற்றும் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி குரூப், டாடா குழுமம் ஆகியவை போட்டிப்போட்டுக் கொண்டு தனது வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறது.

இந்தப் போட்டியில் டாடா குழுமம் சமீபத்தில் உருவாக்கிய நிறுவனம் தான் டாடா டிஜிட்டல்.

சமாளிக்க முடியல.. கட்டணத்தை உயர்த்துகிறோம்.. ஓலா, உபர் அறிவிப்பு..!

டாடா டிஜிட்டல்

டாடா டிஜிட்டல்

இந்தியாவில் ஆன்லைன் டிஜிட்டல் வர்த்தகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் டாடா குழுமம் தனது வர்த்தகத்தை டிஜிட்டல் சேவைத் துறைக்குள் விரிவாக்கம் செய்ய டாடா டிஜிட்டல் என்ற நிறுவனத்தை உருவாக்கியது.

சந்திரசேகரன்

சந்திரசேகரன்

தற்போது டாடா சன்ஸ் தலைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான சந்திரசேகரன் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் டாடா டிஜிட்டல் வந்துள்ளது. இதன் மூலம் சந்திரசேகரன் நேரடி கண்காணிப்பில் டாடா டிஜிட்டல்-ன் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் அடைய வாய்ப்பு உள்ளது.

டாடா நியூ செயலி
 

டாடா நியூ செயலி

சமீபத்தில் டாடா டிஜிட்டல் நிறுவனம் அமேசான், பேடிஎம் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் போட்டிப்போடும் வகையில் டாடா நியூ என்ற சூப்பர் ஆப்-ஐ ஏப்ரல் 7ஆம் தேதி அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் செயலிக்குத் தற்போது ஐபிஎல் போட்டியின் போது பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

ரீடைல் - டிஜிட்டல் வர்த்தகம்

ரீடைல் – டிஜிட்டல் வர்த்தகம்

டாடா டிஜிட்டல் நிறுவனத்தை மொத்தமாக உருவாக்கியதே சந்திரசேகரன் தான், ரீடைல் வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் டாடா குழுமம் ஆன்லைன் வர்த்தகத்தில் இல்லாதது அதிலும் இந்த டிஜிட்டல் உலகில் இல்லாதது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. இந்தப் பிரச்சனையைச் சரி செய்ய உருவாக்கப்பட்டது தான் டாடா டிஜிட்டல்.

டாடா குழுமம்

டாடா குழுமம்

இதைத் தொடர்ந்து அனைத்து ரீடைல் வர்த்தகத்தையும் ஆன்லைன் விற்பனை தளத்திற்குக் கொண்டு வரப்பட்டு, அதை ஒன்றாக இணைத்து டாடா நியூ ஆப்பில் சேர்ந்து மக்களுக்கு ஓன்ஸ்டாப் சொல்யூஷன் ஆக அளிக்கிறது டாடா டிஜிட்டல். டாடா குழுமத்தின் ஆன்லைன் வர்த்தகத்தில் டாடா டிஜிட்டல் மிக முக்கியமான பங்கு வகிக்கும்.

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

என். சந்திரசேகரன் டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் தலைவராகப் பிப்ரவரி மாதம் மீண்டும் நியமிக்கப்பட்டார். இதே வேளையில் டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ், இந்தியன் ஹோட்டல் கோ, டாடா பவர், ஜாகுவார் லேண்ட் ரோவர், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் டாடா கெமிக்கல்ஸ் ஆகிய நிறுவனங்களின் சேர்மன் ஆகவும் இருக்கிறார் என். சந்திரசேகரன்.

டாடா எலக்ட்ரானிக்ஸ்

டாடா எலக்ட்ரானிக்ஸ்

2 வருடத்தில் டாடா குழுமத்தில் புதிதாக உருவாகி இருக்கும் ஏர் இந்தியா, டாடா டிஜிட்டல் நிறுவனத்தின் சேர்மன் ஆக அதிகாரப்பூர்வமாக என். சந்திரசேகரன் நியமிக்கப்பட்டு உள்ள நிலையில் விரைவில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்படுவார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

TATA sons Chairman appoints N Chandrasekaran as new chairman for Tata Digital

TATA sons Chairman appoints N Chandrasekaran as new chairman for Tata Digital சந்திரசேகரன் கட்டுப்பாட்டுக்கு வந்த புதிய நிறுவனம்.. மொத்தம் 10.. இனி ஆட்டம் களைகட்டும்..!

Story first published: Wednesday, April 13, 2022, 11:45 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.