200 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. சன் பார்மா பங்குகள் உயர்வு..!

ஆசிய சந்தையில் கலவையான வர்த்தகச் சூழ்நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை காலை வர்த்தகத்தில் உயர்ந்தாலும் தொடர்ந்து சரிவை எதிர்கொண்டு 10 புள்ளிகள் ஏற்ற இறக்கத்தில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் வட்டி விகித உயர்வு எதிரொலி முதலீட்டுச் சந்தையில் தொடர்ந்தும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதேபோல் உலக நாடுகளில் பல தனது நாணய கொள்கை கூட்டத்தில் வட்டியை உயர்த்த திட்டமிட்டு வருகிறது.

டிசிஎஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து இன்று இன்போசிஸ் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளது. மேலும் சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று சர்வதேச சப்ளை செயின்-ஐ பாதிக்கும் அச்சம் நிலவுகிறது.

ஏப்ரல் 14 அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள், ஏப்ரல் 15 புனித வெள்ளி காரணமாகப் பங்குச்சந்தை இரண்டு நாள் விடுமுறை. இதனால் இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாள் இன்று என்பதால் முதலீட்டாளர்கள் அடுத்த 4 நாட்களுக்குப் பாதிப்பு ஏற்படாத பங்குகளில் முதலீடு செய்து வரும் காரணத்தால் மும்பை பங்குச்சந்தை மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

sensex nifty live today 2022 April 13: Infosys q4, Fed rate hike, china covid cases, global supply chain affected

sensex nifty live today 2022 April 13: Infosys q4, Fed rate hike, china covid cases, global supply chain affected ஏறிய வேகத்தில் இறங்கிய சென்செக்ஸ்.. 2நாள் பங்குச்சந்தை விடுமுறை..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.