இம்ரான் கான் பாலிவுட் சினிமாவில் நகைச்சுவை நடிகர் ஆகலாம் – முன்னாள் மனைவி கிண்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

இஸ்லாமாபாத்: பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தற்போது பதவி பறிபோனதை அடுத்து பாலிவுட் சினிமாவில் நகைச்சுவை நடிகராக உருவெடுக்கலாம் என அவரது முன்னாள் மனைவி ரஹேம் கான் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார்.

இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரஹேம் கான். இவர் இம்ரான் கான் இடம் இருந்து விவாகரத்து பெற்றதையடுத்து தொடர்ந்து தனது முன்னாள் கணவர் குறித்து கிண்டலான கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து வருவது வாடிக்கை.

சமீபத்தில் இம்ரான் கானுக்கு எதிராக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நள்ளிரவுவரை நடந்த நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு இம்ரான் கானுக்கு எதிராக அமைந்தது. இதனை அடுத்து அவர் தனது பிரதமர் பதவியை துறக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். இதனால் கொதிப்படைந்து உள்ள இம்ரான் கான் பாகிஸ்தான் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தனது பேரணிகளில் காரசாரமான கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.

இந்நிலையில் தனது முன்னாள் கணவரின் இந்த தவிப்பை முன்னாள் மனைவியான ரஹீம் கான் கொண்டாடி வருகிறார்.

latest tamil news

சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஹீம் கான் இம்ரான் கான் பிரதமர் பதவியைத் துறந்தது குறித்து பேசினார். பிரதமர் பதவி பறிபோய்விட்டதை தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடிக்கலாம் என்றும் பாலிவுட் வட்டாரத்தில் புகழ்பெற்ற கபில் ஷர்மா ஷோவில் நவ்ஜோத் சிங் சித்து இடத்தில் இம்ரான்கான் பங்கேற்கலாம் என்றும் கிண்டலாக விமர்சித்துள்ளார்.

ஏற்கனவே பதவி பறிபோன கொதிப்பில் உள்ள இம்ரான் கானுக்கு தனது முன்னாள் மனைவியின் இந்த கிண்டல் கருத்து மேலும் அதிருப்தியை ஏற்படுத்தும் என்றால் அது மிகையில்லை.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.