ஐபிஎல் : விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்த மும்பை அணி.!

மும்பை,
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் நேற்று  நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை -பஞ்சாப் அணிகள்  மோதின   .
இந்த போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது .இந்த போட்டியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி 5 போட்டிகளில் 3 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது .

அதே நேரத்தில், மும்பை அணி விளையாடியுள்ள 5 போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வி  அடைந்திருக்கிறது . இது அந்த அணியின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும்  புள்ளி பட்டியலில்  தற்போது மும்பை அணி கடைசி இடத்தில் உள்ளது .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.