அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம்

புதுடெல்லி, அந்தமான் கடல் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. மதியம் 11.03 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 5.97 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 95.10 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக … Read more

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனையில் சச்சினை முந்தி 2-வது இடம் பிடித்த சுப்மன் கில்

பர்மிங்காம், இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 151 ஓவர்களில் 587 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்திய கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 3 … Read more

ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம்

டோக்கியோ, பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் ஜப்பான் இருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. அதன்படி அங்குள்ள டோகாரா தீவில் கடந்த 2 வாரங்களில் அங்கு 900-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளன. இதில் மிகப்பெரிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அதேசமயம் எப்போது வேண்டுமானாலும் வெளியேற தயாராக இருக்குமாறு பொதுமக்களை அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது. இதற்காக டோகாரா கடற்கரை பகுதியில் படகுகள் தயார் நிலையில் … Read more

"விஜய் அண்ணா; உங்களை நம்பித்தான்" கந்துவட்டி கொடுமையால் த.வெ.க. பிரமுகர் தற்கொலை! உருக்கமான கடிதம்

புதுச்சேரி, புதுச்சேரி கொசப்பாளையத்தைச் சேர்ந்தவர் விக்ரம். (வயது 34.) த.வெ.க. பிரமுகரான இவர் கறிக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மேரி ஸ்டோரீஸ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்ரம் மினிலாரி ஒன்றை விலைக்கு வாங்கினார். இதற்காக பல இடங்களில் கந்து வட்டிக்கு கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விக்ரம் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். எனவே அவரால் சரிவர வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் வருமானம் … Read more

உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக்: யுவராஜ் சிங் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி

மும்பை, ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் தொடர் வரும் 18-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இந்த சீசன் இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம், நார்தாம்டன், லெய்செஸ்டர் மற்றும் லீட்ஸ் ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளது. ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் ரவுண்ட்-ராபின் வடிவத்தில் நடைபெறும். … Read more

அமெரிக்கா: நைட் கிளப்புக்கு வெளியே துப்பாக்கி சூடு; 4 பேர் பலி

சிகாகோ, அமெரிக்காவின் சிகாகோ நகரில் ரிவர் நார்த் பகுதியில் உணவு விடுதிகள் மற்றும் பார்களுடன் கூடிய நைட் கிளப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், நைட் கிளப் ஒன்றுக்கு வெளியே திரண்டிருந்த மக்களை நோக்கி நேற்றிரவு சிலர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதன்பின்பு, வாகனத்தில் வந்த அந்நபர்கள் உடனடியாக தப்பி விட்டனர். இதனை தொடர்ந்து தெருவெல்லாம் அழுகுரலாகவும், ரத்தம் வழிந்தோட மக்கள் அலறியபடியும் நாலாபுறமும் ஓடினர். சிலர், யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா? என தேடினர். அவர்களில் … Read more

சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 1 பவுன் நகை பறிப்பு

பாலக்காடு, கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் வண்டித்தாவளம் அருகே மருதம்பாறை பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 82). இவர் ஆதார் கார்டை புதுப்பிப்பதற்காக வண்டித்தாவளம் நகருக்கு வந்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். கைதறவு பகுதியில் வந்த போது, ஸ்கூட்டரில் வந்த ஒருவர் லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் நகையை பறித்து விட்டு தப்ப முயன்றார். இதனால் லட்சுமி சத்தம் போட்டு உள்ளார். இதை கேட்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்து அந்த நபரை … Read more

ஜெர்மனியில் சத்குருவிற்கு "புளூ டங்" விருது வழங்கி கவுரவம்

ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் சமீபத்தில் நடைபெற்ற ‘கிரேட்டர் விழா 2025’ எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு “புளூ டங்” விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சத்குருவின் துணிச்சலான குரல், ஆழமான ஞானம், அசைக்க முடியாத தெளிவுக்காக இவ்விருதினை வழங்குவதாக கிரேட்டர் நிறுவனம் கூறியுள்ளது. ஜெர்மனியில் செயல்பட்டு வரும் “கிரேட்டர் (Greator)” எனும் நிறுவனம், உலகெங்கும் உள்ள இளைஞர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் சுயமுன்னேற்றம் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. இதில் உலக … Read more

விம்பிள்டன் டென்னிஸ்: இந்தியாவின் யுகி பாம்ப்ரி ஜோடி 2-வது சுற்றுக்கு தகுதி

லண்டன், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி- அமெரிக்காவின் ராபர்ட் கலோவே ஜோடி, அர்னியடோ (மொனாக்கோ)- மானுவல் குனர்ட் (பிரான்ஸ்) இணையுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய யுகி பாம்ப்ரி ஜோடி 7-6 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 1 More … Read more

குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காவிட்டாலும் அபராதம் கிடையாது – பஞ்சாப் நேஷனல் வங்கி

புதுடெல்லி, இந்தியாவில் பொதுவாக ஒவ்வொரு வங்கிக் கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இதை பராமரிக்காவிட்டால் அதற்கு தனி அபராதம் விதிக்கப்படும். இது ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். அதேபோல, மெட்ரோ நகரங்களுக்கு ஒரு வித கட்டணமும் சிறிய நகரங்களுக்கு ஒரு கட்டணமும் ஊரக பகுதிகளுக்கு ஒரு கட்டணமும் வசூலிக்கப்படுகின்றன. சேமிப்பு கணக்கு வைத்து இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் சுமையாக இது உள்ளது. இந்த நிலையில்தான் , பிரபல பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் … Read more