மருத்துவ சிகிச்சைக்காக கேரள முதல்வர் அமெரிக்கா பயணம்

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராய் விஜயன் உடல்  நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள  மேயோ கிளினிக்கில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஜனவரி மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். 2 வாரம் சிகிச்சைக்கு பின்  கேரளா திரும்பினார். இந்த நிலையில் திடீரென மீண்டும் அவர்  சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல தீர்மானித்து உள்ளார். வரும் 23ம் தேதி  அமெரிக்கா செல்ல அனுமதி கோரி ஒன்றிய  அரசுக்கு கடிதம் அனுப்பி  உள்ளார்.  இதற்கிடையே கடந்த முறை அமெரிக்காவில் சிகிச்சை பெற்றதற்கான தொகை ரூ.29.82  லட்சத்தை பினராய் விஜயனுக்கு அனுமதித்து கேரள அரசு உத்தரவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.