அரவிந்த்சாமியின் கள்ளபார்ட் ரிலீசுக்கு ரெடி

அரவிந்த்சாமியின் கள்ளபார்ட் ரிலீசுக்கு ரெடி

அரவிந்த்சாமியின் கள்ளபார்ட் ரிலீசுக்கு ரெடி

4/26/2022 1:42:37 PM

அரவிந்த்சாமி , ரெஜினா நடித்துள்ள கள்ளபார்ட் படம் நீண்ட நாள் கிடப்பில் இருந்தது. தற்போது வெளியாக தயாராகிவிட்டது. என்னமோ நடக்குது, அச்சமின்றி படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கி உள்ளார். பார்த்தி, ஆதேஷ் பாலா, பேபி மோனிகா, ஹரிஷ் பெறடி ஆகியோர் முக்கிய பத்திரத்தில் நடித்துள்ளனர். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார்.

படம் பற்ற ராஜபாண்டி கூறியிருப்பதாவது: படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் கள்ளபார்ட் என்பது பொருந்தும் அதனாலேயே படத்திற்கு கள்ளபார்ட் என்று பெயர் வைத்துள்ளோம்.ஹைஸ்ட் திரில்லரில் நடக்கும் உணர்வு பூர்வமான ஒரு போராட்டம் தான் இந்த படத்தின்  திரைக்கதை. இதுவரை யாரும் தொடாத ஒரு கதை களத்தை இதில் பார்க்கலாம் படத்திற்காக பல லட்சம் ரூபாய் செலவில் நான்கு செட்டுகள் அமைக்கப்பட்டு மிகப்பிரம்மாண்டமாக படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். அந்த காட்சிகள் திரையில் பார்க்க பிரமிப்பாக இருக்கும்.  படம் நிச்சயம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. படம்மே மாதம் வெளியாக உள்ளது என்றார் இயக்குனர் ராஜபாண்டி.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.