பஞ்சாபில் உள்ள குருநானக் தேவ் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குருநானக் தேவ் மருத்துவமனையின் எக்ஸ்ரே பிரிவுக்கு அருகே கட்டிடத்தின் பின்புறத்தில் வாகனம் நிறுத்துமிடத்தில்  உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, கட்டிடத்தின் வெவ்வேறு வார்டுகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சரியான நேரத்தில் வெளியேற்றினர். இதனால் பெரும் அசம்பாதவிதம் தவிர்க்கப்பட்டது.
இதன் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பற்றி எரியும் தீயுடன் கரும்புகை சூழ்ந்து வெளியேறி கட்டிடத்தையே மறைக்கும் அளவிற்கு தீ விபத்து ஏற்பட்டிருப்பதை காணலாம்.

இதுகுறித்து தீயணைப்பு அதிகாரி லவ்பிரீத் சிங் கூறுகையில், ” ஆரம்பத்தில் டிரான்ஸ்பார்மரில் இருந்து தீ விபத்து ஏற்பட்டது. 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. 40 நிமிடங்களுக்குள் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்தில் யாருக்கும் சேதம் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நிவாரணப் பணிகளை கண்காணித்து வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து, மாநில மின்துறை அமைச்சர் ஹர்பஜன் சிங் சம்பவ இடத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதுகுறித்து மாநில மின்துறை அமைச்சர் ஹர்பஜன் சிங் கூறியதாவது:-

தீ விபத்துக்கு காரணமான இடத்தில் புதிய மின்மாற்றிகளை நிறுவவும், மருத்துவமனைக்கு மின்சார விநியோகத்தை மீட்டெடுக்கவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. இங்கிலாந்தில் மேலும் இரண்டு பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.