படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா காயமா?

சிட்டாடல் என்ற வெப் தொடரில் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். இதனை பிரியங்கா சோப்ரா நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறார். 4 ஆங்கில இயக்குனர்கள் இயக்குகிறார்கள். இதில் ரிச்சர்ட் மேடன், ஜோன்ஸ், ஸ்டேன்லி டச் உள்ளிட்ட ஹாலிவுட் கலைஞர்கள் நடிக்கிறார்கள். இது ஒரு சயின்ஸ் பிக்சன் ஸ்பை த்ரில்லர் கதை.

இந்நிலையில் முகத்தில் அடிபட்டு காயம் அடைந்தது மாதிரியான ஒரு படத்தை வெளியிட்டு, “வேலை கடினமாக இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். படப்பிடிப்பின் போது நிஜமாகவே காயம் அடைந்தாரா பிரியங்கா அல்லது மேக்-அப்பா என்பதை அவர் கூறவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.