பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகரிப்பு- ஏஐசிடிஇ

பொறியியல் படிப்பு கட்டணம் மற்றும் பேராசிரியர்களின் ஊதியத்தை உயர்த்த ஏஐசிடிஇ பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி, பி.இ., பி.டெக், பி.ஆர்க் படிப்புக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சம் ரூ.79,600 ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், பி.இ., பி.டெக், பி.ஆர்க். படிப்புக்கு ஒரு செமஸ்டருக்கு அதிகபட்சம் ரூ.1,89,800ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க். படிக்க ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சம் ரூ.1,41,200 ஆகவும், அதிகபட்சமாக ரூ.3.34 லட்சம் ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கான கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

3 ஆண்டு எம்.சி.ஏ படிப்புக்கு குறைந்தபட்சம் ரூ.88,500 ஆகவும், அதிகபட்சம் ரூ.1,94,100 ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2 ஆண்டு எம்.பி.ஏ படிப்புக்கு குறைந்தபட்சம் ரூ.85,000-ம், அதிகபட்சம் ரூ.1,95,200ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உதவி பேராசியர்களுக்கு மாதம் ரூ.1,37,189 ஆகவும், பேராசிரியர்களுக்கு ரூ.2,60,379 ஆகவும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சம் ரூ.67,900 ஆகவும், அதிகபட்சமாக ரூ.1,40,000ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்..
நாய்கள் துரத்தியதால் விபரீதம் – ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த 6 வயது சிறுவன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.