ரஷ்யாவுக்கு எதிராக கில்லர் மூவ்: எலக்ட்ரிக் பைக்குகளை பயன்படுத்தும் உக்ரைன்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைனின் ஏராளமான இலக்குகளை குறி வைத்தும், அந்நாட்டின் நகரங்கள் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு ஆயுதங்களை அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வழங்கி வருகின்றன.

உக்ரைனில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் போர்ட்டபிள் ஏவுகணையான லைட் ஆண்டி டேங்க் வெப்பன் ஏவுகணையை ஜனவரியிலேயே இங்கிலாந்து வழங்கியது. போருக்கு முன்பே சுமார் 2,000 ஏவுகணைகளை வழங்கிய பிரிட்டன், மேலும் பல ஆயுதங்களை வழங்கியது. போர்ட்டபிள் ஏவுகணைகள் மூலம் ரஷ்ய விமானங்கள் மற்றும் டாங்கிகளை உக்ரைன் அழித்து வருகிறது.

ஆனாலும், இந்த போர்ட்டபிள் ஏவுகணைகளை போர்முனைக்கு கொண்டு செல்வதில் பல சிக்கல்கள் நீடித்துஹ் வந்ததற்கிடையே, உக்ரேனிய நிறுவனமான ELEEK, போர்க்களத்தில் பயன்படுத்த சத்தமில்லாத அதேசமயம் சக்திவாய்ந்த மின்சார பைக்குகளை உக்ரைன் ராணுவத்துக்கு வழங்கியது. இதன் மூலம் உக்ரைன் வீரர்கள் நடந்து செல்வதை விட மிகவும் அமைதியாகவும் குறைந்த நேரத்திலும் போர்முனையை அடைய முடியும்.

நாடாளுமன்ற தேர்தல்: ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தோல்வி!

இதற்கு முன்பு கைகளால் கொண்டு செல்லப்பட்ட ஏவுகணைகள் தற்போது இந்த
எலக்ட்ரிக் பைக்குகள்
மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. NLAW ஏவுகணைகளை எடுத்துச் செல்லும் வகையில், கண்டெயினர் வசதி இந்த பைக்குகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த
மின்சார பைக்குகள்
அனைத்திலும் செயல்பாட்டு பெடல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 320 கிமீக்கு மேல் செல்ல முடியும். ஒரு மணி நேரத்துக்கு அதிகபட்சமாக 80 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் இந்த பைக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும் அதன் அதிக சுமைகளை சுமக்கும் திறன் மூலம் காடுகள் நிறைந்த பாதைகளில் சுலபமாக செல்லலாம். பொதுவாக இதுபோன்ற வகையிலான ஏவுகணைகள், வீரர்கள் சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்திருந்தாலும், 12.5 கிலோ எடை கொண்ட ஆயுதத்தை மின்சார பைக்கில் கொண்டு செல்லும் போது நீண்ட தூரத்துக்கு எளிதாக கொண்டு செல்லலாம். இருப்பினும், இந்த பைக்குகள் மூலம் ஏவுகணைகளை கொண்டு செல்வதில் சில ஆபத்துகள் இருப்பதாகவும் சுட்டிக் காட்டப்படுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.