சட்டவிரோத எரிபொருள் சேகரிப்பு: அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள்

சட்டவிரோதமான முறையில் எரிபொருளை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் தொடர்பா தகவல்களை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்ளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

118, 119 மற்றும் 1997 ஆகிய தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தி தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சட்டவிரோதமாக எரிபொருட்களை சேகரித்து வீடுகளில் சேமித்து வைப்பது ஆபத்தானது. இதனால்;, சிறு தவரொன்று ஏற்பட்டால் கூட அதனை வைத்திருப்பவருக்கும் பக்கத்து வீடுகளில் உள்ளவர்களுக்கும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக அதிக விலைக்கு எரிபொருட்களை விற்பனை செய்வதையும், சேமித்து வைப்பதையும் தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்

அத்துடன், எரிபொருளில் பல்வேறு பொருட்களை கலந்து விற்பனை செய்பவர்களை கண்டுபிடிக்க பிரதேச புலனாய்வு அதிகாரிகளும் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, உரிய அனுமதிப்பத்திரம் இன்றி அதிக விலைக்கு எரிபொருட்களை விற்பனை செய்தik தொடர்பாக இதுவரையில் 137 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.