சதோச மூலம் நுகர்வோருக்கு தேவையான பொருட்கள்

நுகர்வோருக்குத் தேவையான பொருட்களை ,சதோச விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்ய எதிர்பார்த்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நலின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை ,சதோச விற்பனை நிலையங்களில் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து நுகர்வோர் அதிகார சபை கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நுகர்வோருக்குத் தேவையான பொருட்களை குறையின்றி வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வர்த்தக அமைச்சர் நலின் பெர்னான்டோ மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.