424 முக்கிய பிரமுகர்களுக்கு மீண்டும் பாதுகாப்பு அதிகரிப்பு – பஞ்சாப் மாநில அரசு தகவல்

சண்டிகர்: பஞ்சாபில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு, 424 முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுவந்த பாதுகாப்பைக் குறைத்தது. இதில் பிரபல பாப் பாடகர் சித்து மூஸ் வாலாவும் ஒருவர். இந்நிலையில் மே 29-ம் தேதி அவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, பாதுகாப்பைக் குறைத்ததற்காக ஆம் ஆத்மியை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் ஓபி சோனி பஞ்சாப் – ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஏன் முக்கியப் பிரமுகர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டது என்று பஞ்சாப் ஆம் ஆத்மியை நோக்கி கேள்வி எழுப்பியது.

அதற்கு அக்கட்சி நேற்று பதிலளித்தது: ‘அமிர்தரஸ் பொற்கோவிலில் 1984-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதன் நினைவு தினம் ஜூன் 6-ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. அந்நிகழ்வுக்கு காவல் வழங்கவே முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பைக் குறைத்தோம். அது தற்காலிகமானதுதான். ஜூன் 7 முதல் மீண்டும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்’ என்று தெரிவித்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.