நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (ஜூலை 19) முதல் 24-ம் … Read more

இஸ்லாம்பூரின் பெயர் ஈஷ்வர்பூர் என மாற்றப்படும்: மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் அறிவிப்பு

மும்பை: சங்லி மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்பூரின் பெயர், ஈஷ்வர்பூர் என மாற்றப்படவுள்ளதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று சட்டப்பேரவையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று மாநில உணவு மற்றும் சிவில் விநியோகத்துறை அமைச்சர் சகன் புஜ்பால் சட்டப்பேரவையில் தெரிவித்தார். அமைச்சரவையின் முடிவை மத்திய அரசின் ஒப்புதலுக்கு மாநில அரசு அனுப்பும் என்றும் அவர் கூறினார். இந்துத்துவ அமைப்பான ஷிவ் பிரதிஸ்தான், … Read more

பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை; 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை: கோவையில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முதல் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் கோவையை சேர்ந்த பிளஸ் 1 மாணவி ஒருவர் (16 வயது) சீரநாயக்கன் பாளையம் சென்றுவிட்டு தனது நண்பருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் உள்ள கருப்பராயன் கோயில் அருகே வந்த போது, இருசக்கர வாகனங்களில் வந்த 6 … Read more

வளர்ச்சி அடைந்த பிஹாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி

பாட்னா: வளர்ச்சி அடைந்த மாநிலமாக பிஹாரை உருவாக்க மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அரசு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி, நேற்று பிஹார் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பிஹார் சென்ற பிரதமர் மோடியை, முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா உள்ளிட்டோர் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து மோதிஹரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுமார் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் … Read more

பாகிஸ்தானை சேர்ந்த டிஆர்எப் உலகளாவிய தீவிரவாத அமைப்பு – அமெரிக்கா அறிவிப்பு; இந்தியா வரவேற்பு

வாஷிங்டன்: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு சுற்றுலாத் தலத்தில் 4 தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான டிஆர்எப் பொறுப்பேற்றது. இந்நிலையில் இந்த டிஆர்எப் அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அமெரிக்க அரசு நேற்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க … Read more

“பிள்ளை கதறும்போது எங்கே போனார் அப்பா?” – திருவள்ளூர் சம்பவத்தில் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி

நன்னிலம்: “பிள்ளை கதறும்போது எங்கே போனார் அப்பா? ‘அப்பா’ என்று சொன்னால் மட்டும் போதுமா?” என்று திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை முன்வைத்து, முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் பேருந்து நிலையம் பகுதியில் தொண்டர்கள், மக்கள் மத்தியில் பேசியது: “இந்த மாவட்டம், செழிப்பான விவசாய மாவட்டம். இந்த … Read more

ஹைதராபாத் கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

ஹைதராபாத்: ஹைதராபாத் அடுத்துள்ள ரங்காரெட்டி மாவட்டம், அதிபட்லா அருகே வெளிவட்ட சாலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம், அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ஹைதராபாத்தை சேர்ந்த சந்துலால் (29), கூகுலோத் ஜனார்தன் (50), காவலி பாலராஜு (40). கிருஷ்ணா, தாசரி பாஸ்கர் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக அதிபட்லா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். … Read more

பரஸ்பர நலன், சர்வதேச விவகாரங்களில் ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு

பெய்ஜிங்: ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகளின் தூதரகங்கள் பரஸ்பர நலன் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க ஆர்ஐசி என்ற முறையை அமைத்திருந்தன. கரோனா பரவல் காரணமாகவும், கிழக்கு லடாக்கில் கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா – சீனா இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவும் ஆர்ஐசி முறையின் செயல்பாடு தடைபட்டது. தற்போது இந்தியா – சீனா இடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து வருகின்றன. சமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன பயணம் … Read more

‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வரவேற்கத்தக்கது’ – பெ.சண்முகம் ஆதரவு

நாமக்கல்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் நல்ல திட்டம். இதில் பணம் வீணடிப்பு இல்லை. கடந்த காலத்தில் நடந்த திட்டத்தை பெயரை மாற்றி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார். திருச்செங்கோடு அடுத்த எலச்சிபாளையத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் இடையே கந்துவட்டி கொடுமையால் சிரமப்படும் … Read more

‘பாரதத்தின் மண்ணிலும் நீரிலும் இந்துத்துவா ஆழமாக கலந்துள்ளது’- சிவராஜ் சிங் சவுகான் கருத்து

புதுடெல்லி: பாரத தேசத்தின் மண்ணிலும் நீரிலும் இந்துத்வா ஆழமாக கலந்துள்ளது என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். இந்துத்துவா உலகளவிலாவிய அன்பு மற்றும் அகிம்சையை விரும்புகிறது, பலவீனத்தை அல்ல என அவர் கூறியுள்ளார். இது குறித்து செய்தி தொலைக்காட்சி ஊடக நிறுவனம் ஒன்றுடனான பிரத்யேக பேட்டியில் அவர் பகிர்ந்துள்ளார். “நாங்கள் அகிம்சை மீது நம்பிக்கை கொண்டவர்கள். அது வலிமையால் மட்டுமே சாத்தியமாகிறது. ‘இந்தியர்களும் சீனர்களும் சகோதரர்கள்’ என இப்போது நாம் சொல்லிக் கொண்டு இருந்தால் … Read more