உ.பி: மாடு திருடிய வழக்கு! இளைஞருக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து விசாரணை நடத்திய காவலர்கள்!

உத்தரபிரதேசத்தில் மாடு திருடிய வழக்கில் கைதான இளைஞருக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து கடுமையாக விசாரணை நடத்திய காவலர்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் படாவுன் காவல்துறையினரால் மாடு திருடிய வழக்கு தொடர்பாக 20 வயது இளைஞர் ஒருவர் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்டேஷன் இன்சார்ஜ் உட்பட 5 போலீசார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரபிரதேசத்தில் தினசரி கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் ரெஹான். மே 2ஆம் தேதி வேலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது ரெஹான் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டார். அவரை மாடு கடத்தல் கும்பலுக்கு உதவிய புகாரில் போலீசார் கைது செய்தனர். ரெஹானிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாக ரெஹானின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
Man Violated With Stick, Electric Shocks In Custody. Action Against UP Cops
“போலீசின் விசாரணைக்குபின் ரெஹானால் பலத்த காயம் அடைந்து, நடக்கவோ, பேசவோ முடியவில்லை. போலீஸ்காரர்கள் அவருக்கு மின்சாரம் பாய்ச்சியுள்ளனர். அவரை அடிப்பதற்கு ஒரு குச்சியைப் பயன்படுத்தியதால் அவரது அந்தரங்க பகுதிகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்” என்று அவரது மைத்துனர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ரெஹான் பல மணி நேரம் காவலில் இருந்தார். மேலும் அவரை விடுவிக்க காவல்துறைக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று போலீசார் கூறியதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். பின்னர், 5,000 ரூபாய் லஞ்சம் கொடுத்து அவரை போலீசார் விடுவித்ததாக கூறப்படுகிறது. அவரது சிகிச்சைக்காக 100 ரூபாய் நோட்டை போலீசார் கொடுத்ததாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த வழக்கில் காவலர்கள் 7 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் குறிப்பிடப்பட்டுள்ள 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை இன்னும் நடந்து வருகிறது என்று நகர காவல்துறையின் மூத்த அதிகாரி பிரவீன் சிங் சவுகான் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.