அறந்தாங்கி: `பாதி வேலைதான் முடிஞ்சிருக்கு; ஆனா’ – இலவச வீடு கட்டுமானத்தில் ஊழல்?

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் அரசின் இலவச வீடு கட்டி முடிக்கப்பட்டதாக அரசு தகவலில் பதிவிடப்பட்ட நிலையில், பாதி வீடு கூட கட்டி முடிக்கப்படாமல் இருப்பதாக மக்கள் தங்கள் தரப்பு குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா ஆவணத்தாங்கோட்டை மேற்கு பகுதியை சேர்ந்த தங்கராசு – ராஜாத்தி, குமார் – அமிர்தம், சேனாதிராசன் – மகேஸ்வரி ஆகியோர் அரசால் வழங்கப்பட்ட இலவச வீட்டை பாதி கட்டி முடித்துள்ள நிலையில், அரசாணையில் இவர்கள் வீடு கட்டி முடிக்கப்பட்டதாக வந்த … Read more

டெல்லியில் நூதன முறையில் தாய்-மகள்கள் தற்கொலை- போலீஸாரின் உயிரை காக்க எச்சரிக்கை கடிதம்

டெல்லியில் நூதன முறையில் தாயும், அவரது இரு மகள்களும் தற்கொலை செய்து கொண்டனர். இதனிடையே, வீட்டுக்குள் வரும் போலீஸாரின் உயிரை காக்க எச்சரிக்கை கடிதத்தையும் அவர்கள் எழுதி வைத்துள்ளனர். டெல்லியின் வசந்த் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் அமர் குமார். தொழிலதிபரான இவர், தனது மனைவி மஞ்சு (45) மற்றும் மகள்கள் ஹன்சிகா (19) அன்க்கு (17) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமர் குமார் சிகிச்சை பலனின்றி … Read more

நாமக்கல்: விதவைப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த கொடூரம்; மூவர் கைது

நாமக்கல்லில் விதவைப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவரொருவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல்லை சேர்ந்த 31 வயது விதவைப் பெண் ஒருவர், திருச்செங்கோட்டை சேர்ந்த தனது நண்பர் ஒருவருடன் கடந்த 19-ந் தேதி, நாமக்கல் அருகே உள்ள வீசாணம் ஏரி பகுதியில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த பகுதிக்கு சென்ற 4 பேர், அப்பெண்ணையும் அவரது நண்பரையும் மிரட்டி 1¼ பவுன் செயின் மற்றும் … Read more

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: தமிழகம் வருகிறார் வெங்கையா நாயுடு

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை வரும் 28-ம் தேதி மாலை, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார். சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் ரூ.1.7 கோடி மதிப்பீட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 26-ம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், ஜூன் 3 -ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்திருந்தார். இந்த … Read more

நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்

உத்தரப் பிரதேசத்தில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பியபோது இந்த சோக சம்பவம் நேரிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் உள்ள மஹ்லா கிராமத்தில் நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர், இன்று அதிகாலை காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், சித்தார்த்நகர் நெடுஞ்சாலையில் … Read more

சென்னையில் அனுமதியின்றி நடந்த `DJ’ பார்ட்டி – அளவுக்கதிகமாக குடித்ததால் ஒருவர் உயிரிழப்பு

சென்னையில் காவல்துறை அனுமதி இல்லாமல் “DJ” ஆடல் பாடலுடன் மது விருந்து நிகழ்ச்சி நடத்தியதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்த மதுபாட்டிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அளவுக்கு அதிகமாக மதுகுடித்த இளைஞரொருவர், அங்கு மயங்கி விழுந்து கிடந்த நிலையில், தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். “Great Indian Gathering” என்ற நிகழ்ச்சி பிரேசில் நாட்டைச் சேர்ந்த “Mandra gora” என்ற உலகப்புகழ் பெற்ற நபரால் சென்னையில் DJ நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டது. சென்னை திருமங்கலம் வி.ஆர்.மாலில் 4-வது … Read more

அசாமை புரட்டிப்போட்ட வெள்ளம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 18ஆக அதிகரிப்பு

அசாம் மாநிலத்தில் வெள்ள பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அசாம் மாநிலத்தை புரட்டிப்போட்டுள்ளது. 31 மாவட்டங்கள் நீரில் மிதக்கின்றன. 7.11 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும், நாகன் மாவட்டம் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் மட்டும் 3.39 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 282 தற்காலிக முகாம்களில் 74 ஆயிரம் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதியிலுள்ள மக்களை ரப்பர் படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கும் பணி … Read more

“பஞ்சு, நூல் விலை சீராகும் வரை நூற்பாலைகளை இயக்க மாட்டோம்”- தென்னிந்திய நூற்பாலை சங்கம்

“பஞ்சு மற்றும் நூல் விலை சீராகும் வரை நூற்பாலைகளை இயக்குவதில்லை” என தென்னிந்திய நூற்பாலை உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் ஐந்து மாதங்களாக வரலாறு காணாத பஞ்சு விலை உயர்வை சிறு நூற்பாலைகள் சந்தித்து வருகின்றன. கடந்த ஜனவரியில் 356 கிலோ உடைய ஒரு கேண்டி பஞ்சு விலை, 75 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இது தற்போது, 1.15 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல், கிலோ 328 ரூபாயாக இருந்த நூலின் விலை தற்போது ரூ. 399 … Read more

பெட்ரோல் விலை குறைப்பு – இந்தியாவுக்கு இம்ரான் கான் பாராட்டு

பெட்ரோல் – டீசல் விலையை குறைத்ததற்காக இந்திய அரசுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒன்றரை மாதங்களாக கணிசமாக உயர்ந்து வந்தது. குறிப்பாக உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகே இவற்றின் விலை உயரத் தொடங்கியது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.110-ஐ கடந்தும், டீசலின் விலை ரூ.100-ஐ கடந்தும் விற்பனையாகி வந்தன. பெட்ரோல், டீசல் விலை … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தூப்பாக்கிச்சூடு நடந்து இன்றுடன் நான்கு ஆண்டுகள் முடிவடைகிறது. இதுதொடர்பான விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, சி.பி.ஐ விசாரணை அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையும் சமர்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, கடந்த 2018-ம் ஆண்டு, ஆலையைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளான 2018-ல் மே 22 அன்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது நடைபெற்ற கலவரத்தில், … Read more